ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு- மம்தா பானர்ஜி

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுவை அமைத்துள்ளார்.

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

இஸ்ரேல் நாட்டின் பெகாஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அருக்கு எதிராக எதிர்க்கட்ிகள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு வருகின்றன.

ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரும், பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லாதவை என அவை கூறுகின்றன. ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மாநிலத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைத்து உள்ளார்.

Related posts