பயணத்தடை நீக்கம் – பொதுமக்களின் நிலை!

அத்துருகிரிய முதல் களனிய வரையிலான நெடுஞ்சாலையை அமைப்பதற்கான சீனா நிறுவனம் ஒன்றுடனான கட்டுமான ஒப்பந்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் சீன துறைமுக கட்டுமான நிறுவனத்துடன் (China Harbour Construction Company) குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
—–
14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 1 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
—-
பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதியில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரையில் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
—-
கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் பயணத் தடையானது இன்று (25) காலை முதல் அகற்றப்பட்ட போதிலும், கொரோனா செயலணி விடுத்துள்ள பயண அறிவுறுத்தல்களை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகின்றது.

அத்துடன் கொரோனா செயலணி மூலம் இன்றைய தினம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து முறைகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.

இதன்போது தேவையற்ற முறையில் வெளிவந்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்ததுடன் சிலர் கடுமைக்கா எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்றைய தினம் பயணத்தடை பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கொள்வனவுக்கு நீக்கப்பட்டிருந்த நிலையில் சில பகுதிகளில் அதிகளவான மக்கள் நடமாடியதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் பொருட்களை முண்டியடித்துக் கொள்வனவு செய்ததையும் காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் பொதுமக்களின் செயற்பாடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

Related posts