உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், எமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர் பெற்றர். இந்த நாளிலே நாங்கள் மகிழ்ச்சி அடைவதற்கு காரணம் இயேசு நாதர் எமக்காக உயிரையே தியாகம் செய்தார்.

ஆனால் அவருடைய வாழ்க்கை முடிவடையவில்லை. அவர் அதை தாண்டி சென்று மீண்டும் உயிர் பெற்றார். அப்படியாக உயிர் பெற்று இயேசுநாதர் இன்றும் வாழ்கின்றார்.

நாங்கள் இந்த உயிர்த்த ஞாயிறு அன்று இதற்கு முன்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கா திருவிழா அன்று திருப்பலிக்காக சென்றிருந்த எத்தனையோ மக்கள் குண்டுவெடிப்பு காரணமாக உயிர் இழந்தார்கள். அவர்களை இன்றைய தினம் நாம் விசேடமாக நினைவு கூறுவோம்.

அவர்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என்று நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.

அத்தோடு இன்றைய கால கட்டத்தில் இந்த கொரோனா நோயால் நாங்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டு வாழுகின்றோம். இப்படியான நேரங்களில் நாங்கள் சில நேரம் தேவாலயத்திற்கு சென்று திருப்பலியில் கலந்து கொள்ள முடியாத நிலை கூட காணப்படலாம். இருந்தாலும் நாம் வீடுகளிலேயே இருந்து இந்த உயிர்த்த இயேசுவை மகிழ்சியாக கொண்டாடுவோம்.

உயிர்த்த இயேசு நமக்கு வெற்றியை பெற்று தருவார் என்ற நம்பிக்கையுடன் எமது வாழ்கையை சிறப்பாக கொண்டு செல்வோம். இந்த உயிர்ப்பு விழா உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் புத்துணர்சியையும் புது வாழ்வையும் தரவேண்டும்.

நீங்கள் புத்துயிர் பெற்றவர்களாக இந்த உயிர்த்த யேசுவின் மக்களாக நாங்களுக்கு ஆசிக்கின்றோம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்துள்ள ஆசிச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

——

கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பெரு நாளை முன்னிட்டு வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் இன்று (04) காலை 7.30 மணியளவில் விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.

ஜேசுக்கிறிஸ்த்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இதனை முன்னிட்டு வவுனியா மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.

வவுனியா மாவட்டத்தின புனித ஈஸ்டர் பெருவிழா பிரதான வழிபாட்டு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது. இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் உயிர்த்ஞாயிறு தற்கொலை தாக்குதல் காரணமாக வவுனியாவிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இரானுவ , பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

——

யேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.15 மணிக்கு இடம் பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.

திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப் படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றதோடு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

——

2019 ஆண்டு ஈட்டர் தின குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது வருட ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மலையக கிறிஸ்த்தவ ஆலயங்களில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய மிகவும் அமைதியான முறையில இன்று (04) மிக சிறப்பாக இடம்பெற்றன.

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் தேவ ஆராதனைகள் ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் தலையமையில் நடைபெற்றன.

இதன் போது உயிர்த்த ஞாயிறுதின திருப்பலி ஒப்புக்கொடுத்தல் இடம்பெற்றதுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் புனித தீர்த்தமும் வழங்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று இரவு முதல் இன்று பகல் வரை பல தேவ ஆராதனைகளை மேற்கொள்ள்ப்பட்டன.

இந்த தேவ ஆராதனைகளில் மட்டுப்படுத்தப்பட்ட கிறிஸ்த்தவ அடியார்களே கலந்து கொண்டதுடன் இரண்டு மொழிகளிலும் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு கிறிஸ்த்தவ ஆலயங்களிலும் இரானுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டடிருந்ததுடன் நகரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.

Related posts