வெடிபொருள் சோதனை செய்த போது ராசிக்கும் உடனிருந்தார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் றிழ்வான் வெடிபொருள் சோதனை செய்த வேளையில் உடன் இருந்த சந்தேகநபர், ராசிக் ராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கடந்த 2018 இல் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் றிழ்வான் கைகள் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்தத ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர இடம்பெற்ற குறித்த வெடிபொருட்கள் சோதனை தொடர்பிலும், பயன்படுத்திய வெடிபொருட்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் மேலும் விசாரணைகள்…

தடுப்பூசிகள் தேவைப்படும் நேரத்தில் இராணுவ தளபாட கொள்முதல் ஏன்?

கொரோனா தடுப்பூசிகள் 440மில்லியன் டோஸ் தேவைப்படும் இத்தருணத்தில் ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய பில்லியன்கள் செலவிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் ஆனால் முதலில் கொவிட்19தடுப்பூசிகள்தான் எமக்கு தேவையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் நொச்சியாகம, ஹொருவில ஸ்ரீ தபோதனாராம ரஜமஹா விகாரைக்குச் சென்று மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்று, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 720மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ரஷ்யாவிலிருந்து நான்கு ஹெலிகப்டர்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்பட வேண்டும்தான். ஆனால் இந்த முக்கியமான நேரத்தில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஹெலிக்கப்டர்கள் மற்றும் இராணுவ வாகனங்களை அவசரமாக கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் நோக்கம் என்ன? கொவிட் தடுப்பூசிகளே எமக்கு முதலில் தேவைப்படுகின்றன என்றும்…

புலம் பெயர் தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம்

கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக செம்மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் உலக தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம். “நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற எழுச்சிகர செய்தி இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் அடையாளம். நல்ல பரிணாமம் (Evolution). நல்ல…

வெற்றிமாலை சூட தயாராகுங்கள்: அதிமுக

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றும், வெற்றிமாலை சூட தயாராகுங்கள் எனவும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) வெளியாக இருக்கும் சூழலில் ‛வாக்குக் கணிப்பு' - ‛எக்சிட் போல்' என்ற பெயரில் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தி தொகுப்புகள், கழக உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதை கேட்டு பெருமிதம் கொள்கிறோம். தமிழகம் முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், வரலாறு வியக்கும் வகையில் இந்த தேர்தலிலும் அதிமுக தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே உறுதிப்பட தெரிவிக்கின்றன. 2016ல் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து…

தமிழகத்தில் தி.மு.க., பெரும்பான்மை பெறும்: பரபரப்பு கருத்து கணிப்பு

5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், ,இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் வரை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில் தி.மு.க, கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரிகிறது. இதில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரியவந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என ரிபப்ளிக் டி.வி. சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணி 58 முதல் 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும்,…

கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்.30) மரணமடைந்தார். அவருக்கு வயது 54. அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார். பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்கு கிடைத்தது.பிறகு 1996ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி…

வீட்டில் அஞ்சலி செலுத்த முடியாத சோகம்

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24ஆம் தேதி அன்று கே.வி.ஆனந்துக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்துள்ளார். கரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல் நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள…

கேவி ஆனந்த் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல்

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தின் மறைவால் தனது இதயம் கனக்கிறது என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் கே.வி.ஆனந்த். ’முதல்வன்’, ’பாய்ஸ்’, ’சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருந்தார். கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், "பேரதிர்ச்சி அடைந்திருக்கிறேன். என் இதயம் கனக்கிறது. வலிக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். கேவி ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர்,…