தளபதி 65′ ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு

'தளபதி 65' படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் நெல்சன் திலீப்குமார். 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் 'தளபதி 65' என அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், விஜய்யுடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதலில் ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் நெல்சன் திலீப்குமார். தான் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா

உப்பெனா' படத்தின் ஒட்டுமொத்த வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிப்ரவரி 12-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'உப்பெனா'. சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமானார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி, வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது 'உப்பெனா'. இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர் பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தனர். முதல் 3 நாட்களிலேயே மொத்த வசூலில் 50 கோடி ரூபாயைத் தாண்டி 'உப்பெனா' சாதனை…

மனிதர்களை பார்த்துதான் பயம் விஷ்ணு விஷால்..!

பிரபு சாலமன் இயக்கத்தில், ‘காடன்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் ராணா மலைவாசியாகவும், விஷ்ணு விஷால் யானைப்பாகனாகவும் நடித்துள்ளனர். ‘காடன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி விஷ்ணு விஷால் சொல்கிறார்: ‘‘சின்ன வயதில் நான் யானைகளை பார்த்து ரொம்ப பயப்படுவேன். படத்தில் நடித்துள்ள யானையை முதல் முறையாக பார்க்கும்போது பயமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக என் வாழ்க்கையில் நடந்தவைகளை பார்க்கும்போது, மனிதர்களை விட விலங்குகள் மேல் என்று புரிந்து கொண்டேன்.மனிதர்களை பார்த்துதான் பயப்பட வேண்டும் என்று புரிந்தது. யானைகள் கூட பாசமாக இருக்கின்றன. மனிதர்கள் அப்படி இல்லை. என்னுடைய அனுபவத்தில் இதை சொல்கிறேன். யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். யானையுடன் நடித்து 3 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு நான் போய் அதன் பக்கத்தில் நின்றாலும், என்னை அடையாளம் தெரிந்து…

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்லிம் நயன்தாரா!

திரவுபதி’ படத்தை இயக்கிய மோகன்ஜி அடுத்து, ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக நடித்து இருப்பவர், ஸ்லிம் நயன்தாரா தர்சாகுப்தா. இவருடைய நடிப்புக்கும், படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ஸ்லிம் நயன்தாரா தர்சாகுப்தா இன்ஸ்டாகிராமில், 1 மில்லியன் பார்வையாளர்கள் வந்ததை தொடர்ந்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் கொண்டாட விரும்பினார். சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் அவர், ரசிகர்களை சந்தித்தார். கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இருந்து சுமார் 300 ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிய ஸ்லிம் நயன்தாரா, ரசிகர்களுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டார். அவருடன் ரசிகர்களும் விருந்து சாப்பிட்டார்கள். இப்படி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் விருந்தும் சாப்பிட்ட ஒரே நடிகை ஸ்லிம் நயன்தாராதான். ரசிகர்கள் கொடுத்த அன்பளிப்பை பெற்றுக்கொண்டதுடன், அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். அதோடு அவர் ரசிகர்களின் குடும்பத்தினருடன்…

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை ம.தி.மு.க.வுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன்பாடு கண்டது. ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின்- கேஎஸ் அழகிரி முன்னிலையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று ஆட்சிக்கு வரவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை மறைக்க தனது அரசாங்கத்திற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தி கூறினார். அது சம்பந்தமாக எந்தவொரு நபருடனோ அல்லது தரப்பினருடனோ உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ எவரையும் மகிழ்விக்கவோ வேண்டிய தேவையும் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு தேசிய பிரச்சினை. அதனை ஒரு அரசியல் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த அனர்த்தம் தொடர்பில் சரியான முறையில் செயல்படுவது தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்ய வேண்டிய ஒரு பொறுப்பாகும். தாக்குதல் குறித்து பேராயருக்கு இருக்கும் வேதனை நியாயமானது. அவர் அதைப் பற்றி பேசுவது சரியானது. தாக்குதல் நடந்த நேரத்தில் அமைதியாக இருந்த அப்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இப்போது கருப்புக் கொடிகளை ஏற்றுவது கேலிக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உயிர்த்த…

யாழ் நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்..?

யாழ் நகரில் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார். நகரிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள் கத்திகளுடன் வந்த கும்பலொன்று வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது. இதற்கும் மேலாக வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. இதனால் அச்சமடைந்த வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளை இனந்தெரியாத கும்பலின் தாக்குதல் நடத்திய வீட்டிற்கு யாழ் மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர். ------ தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத்…