யாழ் நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்..?

யாழ் நகரில் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

நகரிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள் கத்திகளுடன் வந்த கும்பலொன்று வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.

இதற்கும் மேலாக வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இதனால் அச்சமடைந்த வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே வேளை இனந்தெரியாத கும்பலின் தாக்குதல் நடத்திய வீட்டிற்கு யாழ் மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

——

தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts