தளபதி 65′ படக்குழுவில் என்ன நடக்கிறது?

'தளபதி 65' படத்தின் இறுதிக் கதையை, இன்னும் சில நாட்களில் விஜய்யைச் சந்தித்துச் சொல்லவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் 'மாஸ்டர்' வெளியாகவுள்ளது. பல ஓடிடி தளங்கள் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கேட்டபோதும், தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இது விஜய் நடிப்பில் உருவாகும் 65-வது படம் என்பதால் 'தளபதி 65' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி முடிவாகிவிட்டாலும், இன்னும் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது. 'மாஸ்டர்' வெளியானவுடன் இதனை அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால், 'மாஸ்டர்' வெளியாகவில்லை என்பதால் இதன்…

லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்களின் திட்டங்கள்

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துவிட்டு தெலுங்குத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் 'மாஸ்டர்' வெளியாகவுள்ளது. இப்படத்துக்குப் பிறகு ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பான அறிவிப்பை சூசகமாக ஜீ தமிழ் விருது விழாவில் தெரிவித்தார் கமல். இந்தப் படம் ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது தயாரிப்பாக இருக்கவுள்ளதாகவும், இதில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இதில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துவிட்டு, தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்…

தனுஷ் ஜோடியாக ஹன்சிகா

தனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் முடிந்துள்ளது. கொரோனாவால் திரையரங்குகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஜெகமே தந்திரம் படத்தை இணைய தளத்தில் வெளியிட முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனந்த் எல்.ராய் இயக்கும் அத்ரங்கி ரே இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011-ல் சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடித்து இருந்தார் என்பது…

ராமர் கோவில் பூமி பூஜை: அரசியல் சாசனத்தை மீறும் செயல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா மற்றும் பூமிபூஜை சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயல் என்று சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் சீதாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:- ஆளுநர், முதல்வர் முன்னிலையில் ராமர் கோவில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது அரசியல் அமைப்பை மீறும் செயல் ஆகும். உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்டளையிடம் விட வேண்டும் என்று கூறியிருந்தது. பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதம் அதைச் செய்தவர்களுக்கு…

கொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்

வடக்கு மாகாணத்தில் சுமுகமான தேர்தல் இடம்பெற்றிருந்ததாகவும், மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பில் பங்குபெற்றியிருந்ததாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். வடக்கில் ஐந்து மாவட்டங்களில் இரண்டு தேர்தல் மாவட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன. இதில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி சேர்த்து யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டமாகவும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு சேர்ந்து வன்னித் தேர்தல் மாவட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் மக்கள் இம் முறை கொவிட்-19 சுகாதார நடமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதேநேரம் வாக்களிப்பு நிலையங்களில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பில் பங்குபெற்றியிருந்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதிஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 71.52…

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….

2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். "தெரண சிறப்பு தேர்தல் ஔிபரப்பு" உடன் நேரடியாக கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார். எனினும், தாமதமானால் பிற்பகல் 2.30 க்கும் 3.00 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவை வௌியிடக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். ----- எந்தவித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் இன்றைய தேர்தல் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.…