புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….

2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

“தெரண சிறப்பு தேர்தல் ஔிபரப்பு” உடன் நேரடியாக கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

எனினும், தாமதமானால் பிற்பகல் 2.30 க்கும் 3.00 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவை வௌியிடக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

—–

எந்தவித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் இன்றைய தேர்தல் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. எந்தவித அசம்பாவிதமுமின்றி தேர்தலானது மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.

எந்தவித வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை. அத்தோடு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது இம்முறை அதிகளவான வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

—–

எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில்,

இன்று (05) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 71 % வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

கொவிட் -19 அவதானம் உலகில் இருந்து நீங்காத இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக பொதுமக்கள் எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

—–

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் வாக்களிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அங்கு மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரை ஆசீர்வதித்தனர்.

தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும் என தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர்,

´வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றமொன்றை உருவாக்குவதற்கான அவசியம் காணப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும். பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார்.

நாங்கள் இதனைவிட சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாக்களிப்பதற்கு மக்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் பாராட்டுகின்றோம்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதமரின் குடும்பத்தினரும், பிரதமருடன் டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, பிரதமரின் பெற்றோரான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தந்தினா சமரசிங்க திசாநாயக்க ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

—–

Related posts