விமலுடன் இணையும் விஜய் சேதுபதி

விமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி' படத்தில் நடித்து முடித்துள்ளார் விமல். இதில் ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'என் பாட்டன் சொத்து', 'மஞ்சள் குடை', 'கன்னி ராசி' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, விமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருவருமே கூத்து பட்டறையில் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்தப் படத்துக்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவிப்பார் என்கிறார்கள். இதுவரை விஜய் சேதுபதி நடிக்காத கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு 'குலசாமி' என்று பெயரிட்டுள்ளனர். இதன் இயக்குநர் மற்றும் உடன் நடிப்பவர்கள் அனைத்தையுமே மிகவும் ரகசியமாய் வைத்துள்ளது…

அதிகம் உழைத்த கதாபாத்திரம்: அக்‌ஷய் குமார்

'லக்‌ஷ்மி பாம்' திரைப்படத்தின் கதாபாத்திரம் தான் தனக்கு மன ரீதியாக அதிகம் உழைத்த கதாபாத்திரம் என்று நடிகர் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார். 2011-ம் ஆண்டு, தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் 'காஞ்சனா'. தற்போது 'லக்‌ஷ்மி பாம்' என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நாயகன் நாயகியாக நடிக்க, லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதை அறிவிக்கும் நிகழ்வில் பேசிய அக்‌ஷய் குமார், "இந்த 30 வருடங்களில் இதுதான் மன ரீதியாக நான் அதிகம் உழைத்த கதாபாத்திரம். இதற்கு முன் இதை நான் அனுபவித்ததில்லை. இதற்கான பெயர் லாரன்ஸ் அவர்களையே சேரும். என் சுயத்தின் ஒரு புதிய வடிவத்துக்கு அவர் என்னை அறிமுகம்…

விஜய்யுடன் பேசுவதுமில்லை அவர் படங்களை பார்ப்பதுமில்லை

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நெப்போலியன் நடித்திருக்கும் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் வெளியாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு. இந்நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன் ஜூம் செயலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. விஜய்க்கும் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று

மத்திய சுகாதாரத்துறை தகவல்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 380 பேர் உயிரிழந்து உள்ளனர் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது. ------ ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. மராட்டியத்தில் இதுவரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 ஆக உள்ளது. மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் போலீசார்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று…

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,06,10,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,14,468 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் பிரேசிலில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 14,08,485 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 59,656 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 7,90,040…