ரஜினியின் தொலைபேசி உரையாடல் லீக்

ரஜினியின் தொலைபேசி உரையாடல் லீக்கானது தொடர்பாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் வருத்தமடைந்துள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வயகாம் 18 நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது மட்டுமன்றி, பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே ரஜினிக்கு நன்றி தெரிவித்திருப்பார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. அந்த அளவுக்குத் தீவிரமான ரஜினி ரசிகர். தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தேசிங் பெரியசாமியை தொலைபேசி வாயிலாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. நேற்றிரவு…

ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதா? நடிகை வனிதா

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தது சர்ச்சையானது. ஏற்கனவே திருமணமான பீட்டர்பாலை முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் வனிதா மணந்தது தவறு என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு உருவானது. இணைய நேரலை நிகழ்ச்சியில் “வாடி! போடி” என்று மோதிக்கொண்டனர். இதையடுத்து வனிதாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் தன்னையும் தனது கணவரையும் அவதூறாக பேசியதற்காக குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் இந்த நோட்டீசை அனுப்பி இருப்பதாக அவர் கூறினார். இந்த வக்கீல் நோட்டீஸ் தகவலை நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “என் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவை இல்லாமல் தலையிட்டு போலி நீதிபதியாக இருக்க முயலும் நல்ல மனம் கொண்ட…

வெப் தொடரில் வடிவேல்

நகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கொரோனாவால் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேல் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் முடிவில் இருந்த நிலையில் வடிவேல் திடீரென்று சினிமாவுக்கு பதில் வெப் தொடராக அதை எடுக்கும்படி சுராஜிடம் வற்புறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்து வெப் தொடருக்கு தகுந்த மாதிரி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சத்யராஜ், பிரசன்னா, பரத், பாபிசிம்ஹா, சீதா,…

டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்தி தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தெலுங்கு டி.வி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவருடன் நடித்த நடிகர் ரவிகிருஷ்ணாவுக்கும் தொற்று உறுதியானது. இந்த நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பாஹர்வாடி நகைச்சுவை படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியாகி உள்ளார். இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. பாஹர்வாடி இந்தி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இதில் போஜானி, பரேஸ் கனட்ரா, ஸ்மிதா சர்வாதே, பக்தி ரத்தோட் உள்பட…

இந்தியாவில் 24 மணி நேரத்தில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 779 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.…

இலங்கையில் இன்று 31.07.2020 காலை

கட்சியில் இருந்து பிரிந்து சென்ற யாரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினராக இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மாத்திரமே மூன்று வேளைகள் உண்ண முடியும் எனவும் அதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -------- தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் இழந்துள்ள சலுகைகளை தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் 24 மணித்தியாலங்களுக்குள் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதாரம் மீண்டும்…