இன்றைய முக்கிய இந்திய தமிழக செய்திகள் 04.04.2020 காலை

வருகிற 5-ந்தேதி (நாளை) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசல் படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என பிரதமர் நேற்று உரையாற்றினார்.

9 நிமிடம் மின்சாரத்தை ஓட்டுமொத்தமாக நாடுமுழுவதும் நிறுத்துவதால் மின்சார சப்ளை பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டட்து.

இந்த நிலையில் எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது என மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மந்திரி ஆர்.கே சிங் கூறியதாவது:-

நாடு முழுவதும் மின் விளக்குகளை அணைப்பதால் 15 ஜிகாவாட் மின்தேவை குறையும் எனவும், இது
ஒட்டுமொத்தத் தேவையில் 4 விழுக்காட்டுக்கும் குறைவுதான்.

புதுப்பிக்கவல்ல எரியாற்றல், நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தியைக் குறைக்கவும், அதிகரிக்கவும் முடியும் என்பதால் மின்தொகுப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

விளக்குகள் அணைக்கப்படும் நேரத்தில் மின்னுற்பத்தி, மின் வழங்கல் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தேசிய அனல்மின்கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கால் மின்தேவையில் 25 விழுக்காடு குறைந்துள்ள நிலையிலும் மின்தொகுப்பு சீராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

——

கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

——-

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவது அதிகாரிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும், ஏனெனில் இது ஏற்படுத்தும் வைரஸ் சார்ஸ், கோவ் 2 நாட்டின் 30 சதவீத மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.

நாட்டில் உள்ள 720 மாவட்டங்களில் 211 பாதிப்புகளையே அரசாங்கத்தால் கண்டறிய முடிந்தது என்று மத்திய சுகாதார தரவு அமைச்சகம் காட்டுகிறது, சில பெரிய மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலவற்றில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் 1,965 கொரோனா பாதிப்புகளை அமைச்சகம் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக உள்ளது.

மாநிலங்களில் வைரஸ் தொடர்ந்து பரவுவது அதிகாரிகளின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் அவை சோதனை கருவிகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாதது போன்ற சவால்களை அவர்கள் எதிர்கொள்ளக்கூடும்.

“ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மாவட்டங்களில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி. ஒரு அளவிற்கு உதவியது, இருப்பினும் மக்களின் ஆரம்ப நடவடிக்கௌ எங்களை காயப்படுத்தியது, என்று கர்நாடக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிஃபிக் ரிசர்ச் (ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்) மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.யின் அலோக் குமார் ஆகியோரின் மாவட்ட வாரியான கணிப்புகளின்படி, ஏப்ரல் இறுதிக்குள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவுக்கு 16,000 க்கும் மேற்பட்ட சுவாச விசையியக்கக் குழாய்கள் மற்றும் கிட்டத்தட்ட 5,000 சுவாச கருவிகள் தேவைப்படலாம்.

நாடு முழுவதும் 6,000 க்கும் மேற்பட்ட சுவாச கருவிகள் இருப்பதாகவும், நாடு முழுவதும் 2,000 ஐ.சி.யூ படுக்கைகள் தயாராக இருக்கிறது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் 100 க்கும் மேற்பட்ட கொரோனா சிகிச்சை வசதிகள் மாவட்ட தலைமையகம் அல்லது பெரிய நகரங்களில் உள்ளன.

20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்ட 17 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 11 மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

——

கரோனா வைரஸை மதச் சிறுபான்மையினர்தான் பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானது. இந்தக் குற்றம் சாட்டுதலால் உண்மையில் அதற்கு அனுமதிக்கும் அரசு உலகத்தால் பின்னோக்கித் தள்ளளப்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் சாம் பிரவுன்பேக் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின், அதற்கு மதரீதியாக சிலர் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து வரும் சூழலில் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்தான தூதர் சாம் பிரவுன் பேக் வாஷிங்டனில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

”மதரீதியான குழுக்கள் தங்களுக்கு இடையே சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும். அதுதான் இப்போது அவசியமான ஒன்று. அதேசமயம் உலகம் முழுவதும் மதரீதியான குற்றவாளிகள் சிறையில் இருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும். குறிப்பாக ஈரான், சீனா நாடுகள் அந்தக் குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் பரவுவதற்கும், மதத்தையும் தொடர்புபடுத்தி பேசும் நாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக பல இடங்களில் இதுபோன்று நடக்கிறது. இதுபோன்ற கருத்துகளுக்கு அரசே ஆதரவு அளிப்பது தவறானது. உடனடியாக இதுபோன்ற பேச்சுகளுக்கு அரசுகள் முற்றுப்புள்ளி வைத்து, கரோனா வைரஸ் இதுபோன்ற வழிகளில் பரவாது. மதத்துக்கும் கரோனா வைரஸுக்கும் தொடர்பில்லை என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த கரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது, உலகம் முழுவதும் எவ்வாறு பரவியதுஎன்று நமக்குத் தெரியும். இது மதச் சிறுபான்மை மக்கள் மூலம் பரவவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற பேச்சுகள், சம்பவங்கள் உலகில் பல இடங்களில் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்கும், பேச்சுகளுக்கும் அரசு அனுமதியளித்தால் அந்த நாடு உலகத்தால் பின்னோக்கித் தள்ளப்படும்.

இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையுடன் இணைந்து பணியாற்றி, தேவையான உதவிகளைப் பெற வேண்டும். பல நாடுகளில் இதுபோன்ற கடினமான நேரங்களில் சிறுபான்மை மக்களுக்குப் பொது மருத்துவம் தேவையான அளவுக்கு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுகிறார்கள். அனைத்துச் சமூகத்தினரையும் ஒரே மாதிரியாக நடத்தி, அவர்களுக்கு மருத்துவ வசதிகளையும், வளங்களையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்”

இவ்வாறு பிரவுன்பேக் தெரிவித்தார்.

Related posts