உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 13 – 14

தபசுகால சிந்தனை 4-5 தம்மை அர்ப்பணித்து நம்மை அன்புகூர்ந்த தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16. இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் இக்காலத்தில், அலைகள் வாசக நேயர்களாகிய நாம் அனைவரும் அவைகளை அறிந்து கொள்வது மிகவும் நலமாக இருக்கும். இந்த வாரம் பத்திரிகையில் வாசித்த ஓர்செய்தி இந்த சிந்தனையை எழுத தூண்டியது. உடல்நிலை சரியில்லா கணவனை கவனித்துக் கொள்வதற்காக வயதான பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்து சென்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவத்தை நாமும் பத்திரிகையில் வாசித்து இருப்போம். பல வைத்தியர்கள் தாதிமார்கள் இன்று தமது உயிரைக் கொடுத்து சேவை செய்வதை நாம் காண்கிறோhம். ஆனால் நம்…

கீர்த்தி சுரேஷுக்கு தொழிலதிபருடன் திருமணமா?

கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரைத் திருமணம் செய்யவுள்ளார் என்று வெளியான செய்திக்கு அவருடைய தரப்பு மறுப்பு தெரிவித்தது. மலையாளத்தில் நாயகியாக அறிமுகமானாலும், 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதற்குப் பிறகு விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கினார். தெலுங்கில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட 'மஹாநடி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவருடைய நடிப்புக்குப் பாராட்டுக்கள் குவிந்தது மட்டுமன்றி தேசிய விருதையும் வென்றார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேற்று (மார்ச் 2) முதல் சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம் என்று தகவல் பரவியது. தொழிலபதிர் ஒருவரை கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளையாகப் பார்த்திருப்பதாகவும், அதற்கு கீர்த்தியும் சம்மதம்…

வீரியம் இழக்கின்றனவா வைரமுத்து கவிதைகள்..?

தற்போதுள்ள சூழலை முன்வைத்து 'கொரோனாவும் கொரில்லாவும்' என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் வைரமுத்து. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனை முன்வைத்து கவிப்பேரரசு வைரமுத்து 'கொரோனாவும் கொரில்லாவும்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை: கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; கிருமி ஞானம். கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம் கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போம் அரசாங்க கர்ப்பத்தில் இது கட்டாய சுகம் மற்றும் விடுதலைச் சிறை மரணம் வாசலுக்கு வந்து அழைப்பு மணி அடிக்கும் வரைக்கும் காது கேட்பதில்லை மனிதர் யார்க்கும் ஓசைகளின் நுண்மம் புரிவதே இந்த ஊரடங்கில்தான் இந்தியப் பறவைகள்…

இன்றைய முக்கிய இந்திய தமிழக செய்திகள் 04.04.2020 காலை

வருகிற 5-ந்தேதி (நாளை) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசல் படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என பிரதமர் நேற்று உரையாற்றினார். 9 நிமிடம் மின்சாரத்தை ஓட்டுமொத்தமாக நாடுமுழுவதும் நிறுத்துவதால் மின்சார சப்ளை பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டட்து. இந்த நிலையில் எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது என மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மந்திரி ஆர்.கே சிங் கூறியதாவது:- நாடு முழுவதும் மின் விளக்குகளை அணைப்பதால் 15 ஜிகாவாட் மின்தேவை குறையும் எனவும், இது ஒட்டுமொத்தத் தேவையில் 4 விழுக்காட்டுக்கும் குறைவுதான். புதுப்பிக்கவல்ல எரியாற்றல்,…

மரணச்சடங்கு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு இலங்கை அதிகாரிகள் மதிப்பளிக்கும் அதேநேரம் உயிரிழந்தவர்களது இறுதி மரணச் சடங்கை அவர்களது உறவினர்களின் விருப்பம் மற்றும் கலாசாரத்துக்கமைய முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் கொவிட்-19 தொற்றின் காரணமாக உயிரிழந்த இரண்டு முஸ்லீம்களது சடலங்களின் இறுதிக் கிரியைகளும் அவர்களுடைய உறவினர்களின் விருப்பத்துக்குமாறாக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமையவே முன்னெடுக்கப் பட்டிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் இதுபோன்றதொரு காலகட்டத்தில் அதிகாரிகள் இனங்களிடையேவேற்றுமையை வளர்க்காமல் அவர்களை ஒன்று சேர்க்க முற்பட வேண்டும். அதற்காக அவர்களது உறவினர்களின் விருப்பத்துக்கமைய இறுதிக்கிரியைகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட வெண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.எம் அச்சுதன் இன்று (03) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேர்களும் மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களுக்கு ஏதாவது அசாதாரணமான உடல் நிலை காணப்பட்டால் உடனடியாக தொடர் மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளதாக போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி Dr.கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார். அவர்…