மரணச்சடங்கு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு இலங்கை அதிகாரிகள் மதிப்பளிக்கும் அதேநேரம் உயிரிழந்தவர்களது இறுதி மரணச் சடங்கை அவர்களது உறவினர்களின் விருப்பம் மற்றும் கலாசாரத்துக்கமைய முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் கொவிட்-19 தொற்றின் காரணமாக உயிரிழந்த இரண்டு முஸ்லீம்களது சடலங்களின் இறுதிக் கிரியைகளும் அவர்களுடைய உறவினர்களின் விருப்பத்துக்குமாறாக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமையவே முன்னெடுக்கப் பட்டிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இதுபோன்றதொரு காலகட்டத்தில் அதிகாரிகள் இனங்களிடையேவேற்றுமையை வளர்க்காமல் அவர்களை ஒன்று சேர்க்க முற்பட வேண்டும். அதற்காக அவர்களது உறவினர்களின் விருப்பத்துக்கமைய இறுதிக்கிரியைகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட வெண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts