உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )

இயற்கையின் ஆசீர்வாதமும், தேவனுக்கு நன்றியும். சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். வாசகநேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். பொங்கல் என்பது தம்மை வாழவைக்கும் கடவுளுக்கு நன்றியுடன் படைக்கும் முதற்பலனாகும் அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். மத்தேயு 5:45 நாம் வாழும் இந்த உலகத்தில் சகலஉயிரினங்களும் தேவன் படைத்த படைப்பால் கிடைக்கும் சகல நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றன. குறிப்பாக சகல மனிதர்களும் அவர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தேவன் படைத்த இயற்கையின் ஆசீர்வாதங்களை எவ்வித வேறுபாடுமின்றி அனுபவித்து வருகின்றனர். சூரியன், சந்திரன், காற்று, மழை, பனி, கடல், ஆறு, குளம், காடு, மேடு ஆகிய அனைத்திலும் இருந்து தேவனின் படைப்பால் கிடைக்கும் நன்மைகளையும்…

அரவிந்தசாமியின் எம்.ஜி.ஆர். தோற்றம் வெளியானது

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். விஜய் டைரக்டு செய்கிறார். தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். திரைக்கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்தி பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்தியிலும் தலைவி பெயரையே வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க அரவிந்தசாமியை தேர்வு செய்தனர். இவர் ரோஜா, பம்பாய்…

“மாஸ்டர் – 2-ம் போஸ்டர் வெளியீடு”

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியானது. அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து, விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர் ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்ந்த படத்தில் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும், சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியிலும் நடந்தது. கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது சென்னையில் சிறைச்சாலை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். மாஸ்டர் படம் கொரிய படத்தின் கதை என்று தகவல் வெளியானது. இதனை மறுத்த படக்குழுவினர் கொரிய படத்தின் கதையும் மாஸ்டர் கதையும் வெவ்வேறானவை என்றனர். இதையடுத்து,…

எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் ‘தலைவி’ பட டீசர்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். படத்தில் நடிகர் அரவிந்த சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக…

நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. திராவிடர் விடுதலை கழக மாநகர தலைவர் நேருதாஸ், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நேருதாஸ், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும் திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம்…

ஶ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் சபை இம்முடிவை எடுத்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கட்சியின் கட்சியின் முடிவுகளுக்கு மாற்றமாக நடந்துகொண்டமை தொடர்பில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த பதவிக்கு அத்தனகல தொகுதியின் பதில் அமைப்பாளராக லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.