உயிர்த்த ஞாயி­று­ தாக்­கு­தல்கள் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னவை

இலங்­கையில் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் முற்­றிலும் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னவை என்றும், அவை பிரி­வி­னையை விடுத்து சகிப்­புத்­தன்­மை­யையும், வெறுப்பை விடுத்து அன்பை விரும்­புவோர் மீதும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் என்றும் பிரித்­தா­னிய வேல்ஸ் இள­வ­ரசர் சாள்ஸ் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

பிரித்­தா­னி­யாவின் கிழக்கு பிராந்­தி­யத்தில் நடை­பெற்ற இம்­மா­னுவேல் கிறிஸ்­தவ கூட்­ட­மொன்றில் இலங்­கையில் நடை­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் பற்றிக் கருத்து வெளி­யிட்ட சாள்ஸ், அவை ‘உல­கெங்­கிலும் உள்ள மதச்­சு­தந்­தி­ரத்தின் மீதான தாக்­கு­த­லாகும்’ என்றும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கொழும்­பி­லுள்ள புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்­பி­லுள்ள புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­லயம் மற்றும் பிர­பல நட்­சத்­திர ஹோட்­டல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் 250 இற்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனர்.

‘உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்­கையில் நடத்­தப்­பட்ட காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களின் கார­ண­மாக கொல்­லப்­பட்­டர்­களை நினை­வு­கூ­ரு­ப­வர்கள் மற்றும் அத்­தாக்­கு­தல்­களால் வாழ்க்­கையில் பாரிய திருப்­பத்தை எதிர்­கொண்­ட­வர்கள் ஆகி­யோ­ருக்­கான எனது ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் வித­மா­கவே நான் இங்கு வருகை தந்­தி­ருக்­கிறேன். அன்­றைய தினம் இடம்­பெற்ற பயங்­க­ர­மான இழப்­புக்கள் ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மையை இந்த நவீன யுகத்தில் கிறிஸ்­த­வர்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட பெரும் வன்­மு­றைகள் அடங்­கிய மிக­மோ­ச­மான நாளாக மாற்­றி­விட்­டது’ என்று இள­வ­ரசர் சாள்ஸ் அவ­ரு­டைய உரையில் தெரி­வித்­துள்ளார்

‘அச்­சம்­ப­வத்­தினால் நீங்­களும், கிறிஸ்­த­வர்­களும் தாங்­கிக்­கொண்ட காயங்­களை எந்­த­வொரு வார்த்­தை­களைக் கொண்டும் ஆற்­றி­விட முடி­யாது. ஆனால் நானும், இந்த நாட்டில் வாழும் மேலும் பலரும் நீங்கள் அடைந்த வேதனை தொடர்­பிலும் உங்­க­ளது நலன் குறித்தும் பெரிதும் அக்­க­றை­யுடன் சிந்­திக்­கின்றோம் என்­பதை அறி­யத்­தர விரும்­பு­கின்றேன். இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகெங்கிலும் உள்ள மதச்சுதந்திரத்தின் மீதும், பிரிவினையை விடுத்து சகிப்புத்தன்மையையும், வெறுப்பை விடுத்து அன்பை விரும்புவோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts