ஜெனிவா பிரேரணையை அரசாங்கம் ஏற்காது – டிலான்

சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு தாம் அடி பணியப் போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, ஜெனிவா பிரேரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் சர்வதேச சக்திகளுக்கு அடிபணிந்தே ஆட்சி செய்தனர். சர்வதேச கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு சர்வதேச சக்திகளுக்கு முன்னாள் மண்டியிட்டு நாட்டினை தவறான திசையில் கொண்டு சென்றனர்.

ஆனால் நாம் இன்று உருவாக்கியுள்ள அரசாங்கம் ஒருபோதும் சர்வதேச அமைப்புகளுக்கோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கோ புலம்பெயர் அமைப்புகளுக்கோ அடிபணிந்து செயற்பட மாட்டோம்.

எமது கொள்கை தேசியத்தை கட்டியெழுப்பும் கொள்கையாகும். ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவான சிந்தனையில் உறுதியாக தேசிய வாதக் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நாம் சர்வதேச சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

Related posts