யாழ். மத்திய பஸ் நிலையத்தில் மோதல்

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் பஸ் நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்வத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பஸ் நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வோர் சிலரின் வாகனத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர் பஸ் நிலையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் குறித் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு கூடிய இ.போ.ச. சாரதிகள், நடத்துனர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஆதரவாக நின்றனர்.

இந்நிலையில் வியாபாரிகள் சிலர் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும் சேர்ந்து கடைகளுக்குள் இருந்த கம்பிகள், கத்தரிக்கோலை எடுத்து வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரையும் நடத்துனரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

குறித்த சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த நடத்துனர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts