கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் இல்லை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் சிலர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை முன்வைத்தாலும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் அந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜாஎல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிலர் தமது கட்சியில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்திருப்பினும் கட்சியில் அவ்வாறு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts