ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது

தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரினால் வெற்றிபெற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (08) தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாகவும் மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை கூட வைக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்துவிட்டு மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் மக்களுக்கு நன்கு சிந்திக்கும் திறன் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ------ விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ…

ரஜினிகாந்தும் நயன்தாராவும் நடித்த `தர்பார்’

ரஜினிகாந்தும் நயன்தாராவும் நடித்த `தர்பார்’ படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வரயிருக்கிறது. அதே தேதியில் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் வெளிவர உள்ளன. அந்த படங்களின் வசூலில் `தர்பார்’ படம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. `தர்பார்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது, மும்பையில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பெரும் பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. ----- விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார். உழவன் அறக்கட்டளை அமைப்பை தொடங்கியது குறித்து கார்த்தி கூறும்போது, “விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய…

ஆடை படத்திற்கு முன் விலக இருந்தேன் அமலா பால்

நடிகை அமலா பால் ‘ஆடை' படத்தில் நிர்வாண காட்சியை படமாக்கியது குறித்த அனுபவத்தை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இயக்குநர் ரத்னகுமார் நிர்வாண காட்சியில் நடிக்க சிறப்பு ஆடை அணிவது குறித்து விவாதித்ததாகவும் , நான் “அதைப் பற்றி கவலை வேண்டாம்” என்று அவரிடம் கூறிவிட்டதாக தெரிவித்தார். இருப்பினும், படப்பிடிப்பின் போது தான் மிகவும் பதட்டமாக இருந்ததாகத் தெரிவித்தார். அந்த நேரத்தில் மன அழுத்தத்தை உணர்ந்ததாகவும், செட்டில் என்ன நடக்கும், எத்தனை பேர் இருப்பார்கள், பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் என்றும் அவர் கூறினார். காட்சி எடுப்பதாக இருந்த இடம் கிட்டத்தட்ட மூடப்பட்டு இருந்தது. செட்டில் 15 பேர் மட்டுமே இருந்தனர். படக்குழுவினரை நம்பவில்லையென்றால் நான் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது என்று அமலா பால் கூறினார்.…

5 மாதங்கள் மாயமாகி இருந்த முகிலன் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வெளியிட்டார். அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது திடீரென முகிலன் மாயமானார். சுமார் 5 மாதங்கள் அவர் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 6-ந் தேதி திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலன் மீட்கப்பட்டார். தற்போது பாலியல் புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெருங்கியது எப்படி என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- முகிலனின் சொந்த ஊரான சென்னிமலையில் அவருடைய மனைவி…

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: வைகோவின் மனு ஏற்கப்பட்டது

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக ஆதரவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சுயேச்சைகள் 4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரின் மனு ஏற்கப்படுமா? இல்லையா? என்று எதிர்பார்க்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தலைமை செயலகம் வருகை தந்தனர். மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் மனு…

கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் சரணடைய உத்தரவு

கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைவதில் இருந்து விலக்கு கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் கோர்ட்டில் சரண் அடையவில்லை. அவரைத்தவிர 9 பேர் சரண் அடைந்தனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய, ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை கடந்த ஏப்ரல் 29-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் என்.வி.ரமணா, மோகன் எம்.ஷாந்தனு கவுடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் இந்த தீர்ப்பை பிறப்பித்தபோது ராஜகோபாலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர் சரணடைவதற்கு கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜூலை 8-ந் தேதிக்குள்…