Day: June 24, 2019
மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் ! பிளந்தது ஈரான் பாராளுமன்றம் !
அலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019
01. எதைச் செய்தாலும் அதற்கு சரியான வயதில்தான் இருக்கின்றோம் என்று நினையுங்கள். இப்படி எண்ணுவோர் தொகை உலகில் மிகமிக குறைவாகவே இருக்கிறது. இது ஒரு கவலை தரும் விடயமாகும். 02. எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்ற சாக்குப் போக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மையாக வரக்கூடிய வாய்ப்புக்களை எல்லாம் பறித்து சென்றுவிட்டது. மேலும் தங்கள் வயது பொருத்தமானதல்ல என்று நினைப்பதால் பெரும்பாலானவர்கள் முயற்சிப்பது கூட இல்லை. 03. ஒரு செயலை செய்யாது விடுவதற்கு வயது ஒரு சாக்குப்போக்காக இருப்பது பல இடங்களில் சிறிய சிறிய நோய்கள் போல பரவியுள்ளது. 04. உங்களுக்கு எவ்வளவு வயதாகியுள்ளதாக நினைக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கான உண்மையான வயதாகும். 05. வாய்ப்புக்கள் நிறைந்த ஆண்டுகள் நமக்கு உயிருள்ளவரை இருக்கிறது. வாழ்க்கை முடிந்து போனதென நினைத்து மரண அறிவித்தலை பார்த்து, நமக்கு எப்போ மரணம் என்று கலங்கி,…