இன்றைய முக்கிய சினிமா செய்திகள் 05.06.2019

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க என்ஜிகே படம் திரைக்கு வந்திருக்கிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் எப்படி முதல்வராகிறான் என்பதை படம் கூறுகிறது. யாரை தாக்கி அரசியல் படம் எடுத்திருக்கிறீர்கள் என்றதற்கும் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றியும் கூறினார். ‘யாரையும் தாக்கி என்ஜிகே எடுக்கவில்லை.

இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த கதைக்கு சூர்யாதான் பொருத்தமானவர். கார்த்தி, பார்த்திபன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2ம் பாகம் வருமா என்கிறார்கள். கண்டிப்பாக வரும். அதற்கான ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. சோழர்கள் வரலாற்றை கூறும் கதையான இதன் 2ம் பாகம் முதல்பாகத்தைவிட மிக அற்புதமாக அமைந்திருக்கிறது.

கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுக்க முடியாது. அதுபோல் தனுஷ் இல்லாமல் புதுப்பேட்டை 2ம் பாகம் எடுக்க முடியாது. இது பற்றி தனுஷிடம் பேசியபோது சொல்ல வேண்டியதையெல்லாம் முதல்பாகத்திலேயே சொல்லியாச்சி. 2ம் பாகத்தில் என்ன சொல்ல முடியும் என்று கூறினார். எனவே 2ம் பாகத்திற்கான வாய்ப்பு இல்லை’ என்றார் செல்வராகவன்.

—————–

ம்ம்ம்… படையப்பா… டிரஸ்ஸபத்தி மட்டும் பேசாதே..’ என்று படையப்பா படத்தில் ரஜினியிடம் கோபப்படுவார் செந்தில். அது நகைச்சுவை காட்சியாக அமைந்தது. ஆனால் டிரஸ்ஸ பத்தி பேசிய நெட்டிஸன்களை விளாசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 30 வயது நடிகை மிமி சக்ரபோர்த்தியும், 29 வயது நடிகை நுஸ்ரத்தும் வெற்றி பெற்றனர்.

இருவரும் மாடர்ன் உடையில் தங்களது அடையாள அட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டனர். ஜீன்ஸ் பேண்ட், டி ‌ஷர்ட் அணிந்து நாடாளுமன்றத்திற்குள் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கு நெட்டிஸன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைக்கண்டு உர்ரான சத்யராஜின் மகள் திவ்யா பதிலடி தந்திருக்கிறார்.

‘பெண்கள் எந்த உடை அணிய வேண்டும், எந்த உடை அணியக்கூடாது என்று கமெண்ட் அடிப்பதை ஏற்க முடியாது. அந்த காலம் உடனே முடிவுக்கு வரவேண்டும். கலாச்சாரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நடக்கும் மிகப் பெரிய பாசாங்கு இது. எம்.பிக்களாக அவர்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவேண்டுமே தவிர அவர்கள் அணியும் ஆடையை அல்ல’என வெளுத்து வாங்கியிருக்கிறார்.

————–

மகேஷ், அக்‌ஷிதா நடித்துள்ள படம், கறுப்பு ஆடு. இயக்கம், எம்.விஜய் மோகன். படம் குறித்து அவர் கூறியதாவது: காதல் திருமணம் செய்துகொண்ட ஐஸ் வியாபாரி மகேஷ், திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பிறகு தனது நோய்க்கான காரணம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார். சமூகத்தை பாதித்து அழித்து வரும் அந்த நோயை கண்டுபிடித்து தீர்வு காண்கிறாரா என்பது கதை.

வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால், தன்னால் டப்பிங் பேச முடியவில்லை என்று மகேஷ் சொன்னதால், அவருக்கு நான் டப்பிங் பேசினேன். அக்‌ஷிதா தெலுங்கில் படம் இயக்கியுள்ளார் என்றாலும், எனது டைரக்‌ஷனில் நடிக்கும்போது, எந்தக் காட்சியிலும் அவர் தலையிட்டு கருத்து சொன்னது கிடையாது.

Related posts