தாதா ஆகிறார் தளபதி விஜய்

பத்து பேரை அடித்து வீழ்த்தும் ஆக்‌ஷன் ஹீரோவாக தொடர்ச்சியாக நடித்து வந்த விஜய், ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் இணைய தள நிறுவன சிஇஓவாக நடித்து ஒருவிரல் புரட்சி வசனம் பேசி அசத்தினார். அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அட்லியுடன் விஜய் இணையும் 3வது படமாக இது உருவாகிறது. இதன் படப் பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடித்துள்ள கைதி படம் இயக்கி இருக்கிறார். இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து விஜய் படத்தை இயக்குகிறாராம். விஜய்யை சந்தித்து ஸ்கிரிப்ட்டை கூறிய இயக்குனர், இது சூப்பர் ஹீரோ கதை இல்லை, கேங்ஸ்டர் கதை அதாவது தாதா கதை’ என்றாராம்.…

மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அவந்திபுராவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன் அதிர்ச்சி ஓய்வதற்குள் அங்கு மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் ஸ்ரீநகர், அவந்திபுராவில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.

இஸ்லாமிய விரோதிகளை வைத்து முஸ்லிம்களைக் கணிப்பிடக் கூடாது

சிறு குழுவினர் செய்த காரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அளவிடக்கூடாது. தமது சமூகத்தில் உள்ள விடயங்களை சுய பரிசீலனை செய்ய ஆரம்பித்திருப்பதாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிறியதொரு குழுவினர் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிறியதொரு குழுவினரே வன்முறைகளில் ஈடுபட்டனர். எனவே சிறியதொரு குழுவை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இனத்தையும் அளவிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் தலைவர்களான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், பேரியல் அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர்.…

மே 18 அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது..1

தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் இராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில், இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயமா என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் என சுட்டிக்காட்டிய இராணுவ தளபதி, நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.…