உலகிலேயே முதல் முறையாக கிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை

நியூசிலாந்தில் உள்ள விலங்குகள் நல மருத்துவர்கள் பிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள, நியூசிலாந்தை பூர்விகமாகக் கொண்ட காகபோ வகைக் கிளிகள் தற்போது வெறும் 144 மட்டுமே உள்ளன. நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள காட்பிஷ் தீவில் இருந்த இந்தக் கிளிக் குஞ்சின் தலையில் வழக்கத்துக்கு மாறான வீக்கம் இருப்பதை கண்ட விலங்குகள் பாதுகாப்புத் துறையின் காகபோ கிளிகள் மீட்புக் குழுவினர் அதன் மண்டை ஓட்டில் துளை இருப்பதைக் கண்டறிந்தனர். மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யும் வழிமுறைகளைப் பின்பற்றி, எஸ்பி 1-பி என்று பெயரிடப்பட்ட இந்தக் கிளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நாட்டின் அரசு விமான நிறுவனம் பயணச் செலவுக்கு கட்டணம்…

அயோக்யா: சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியானது; நடந்தது என்ன?

வெள்ளிக்கிழமையன்று வெளியாவதாக இருந்த விஷால் நடித்த அயோக்யா, அதர்வா நடித்த 100 ஆகிய படங்கள் இன்றுதான் வெளியாகியுள்ளது. பணம் சார்ந்த பிரச்சனைகளால் நேற்று படம் வெளியாகாததற்குக் காரணம் என சொல்லப்பட்டது. கோடை விடுமுறையாக இருப்பதால் இந்த வாரம் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த அயோக்யா, அதர்வா நடித்த 100, ஜீவா நடித்த கீ, ஜெய் - கேத்தரீன் தெரசா நடித்த நீயா - 2 ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அயோக்யா, கீ, 100 ஆகிய படங்கள் வெளியாவதால் நீயா - 2 படத்தின் வெளியீடு மே 24ஆம் தேதிக்குத் தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையில், விஷால் நடித்த அயோக்யா படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. சில திரையரங்குகளில் காலை 8 மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் காத்திருந்த நிலையில், படம்…

முன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பயணிகளைக் காப்பாற்றிய விமானி

விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால், முன் சக்கரங்கள் இல்லாமலேயே மியான்மர் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர் தாம் இயக்கிய விமானத்தைத் தரை இறக்கினார். மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் மாண்டலே விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நிற்கும் முன் அதன் முன் அடிப்பகுதி ஓடுதளத்தில் உரசியது. அந்த எம்ரேர் 190 ரக விமானத்தில் இருந்த 89 பயணிகளுக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் சாமர்த்தியமாக விமானத்தை இறக்கியதற்காக பாராட்டப்பட்டு வருகிறார் கேப்டன் மியாட் மோ ஆங். லேண்டிங் கியர் வெளியே வந்து விட்டதா என்பதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதி செய்வதற்காக கேப்டன் மியாட் மோ ஆங், அந்த விமான நிலையத்தைச் சுற்றி இரு முறை வானில் வட்டமடித்ததாக மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. விமான உற்பத்தி துறையில் களமிறங்கிய சீனா -…