வண்ணத்திரை பேசும் சின்ன சின்ன சினிமா செய்திகள்

கதாபாத்திரத்துக்கு ஏற்ப சூர்யா தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடிப்பார். கஜினி படத்துக்காக மொட்டை போட்டார், பேரழகன் படத்துக்காக எடுப்பான பல் வைத்துக்கொண்டு கூன் விழுந்த மாற்று திறனாளியாக நடித்தார். 7ம் அறிவு படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்தார். தற்போது புதிய படத்துக்காக வழுக்கை தலையாகிறார். இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சூர்யா. தொழில் அதிபர் ஒருவரின் வாழ்க்கையை தழுவி உருவாகும் இப்படத்திற்காக தொழில் அதிபராக நடிக்கும் சூர்யா வழுக்கை தலை தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். ------------- ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இதில் ஹீரோயினாக அலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்ஸி நடிக்க ஒப்பந்தமானார்கள். திடீரென்று டெய்ஸி தவிர்க்க முடியாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடுவதில் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர். நித்யாமேனன்,…

கேர்னிங் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு

அனைத்துலக தமிழ் கலை நிறுவனமும், மாலதி கலைக்கூடமும் இணைந்து நடத்தம் நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு நிகழ்வு டென்மார்க கேர்னிங் நகரில் எதிர்வரும் 13.04.2019 சனிக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் இடம் பெற இருக்கிறது. நோரகேத கலாச்சார இல்லம் இலக்கம் 7 என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. அத்தருணம் கலாக்கேந்திரா கலையக நடன ஆசிரியர் திருமதி சுமித்திரா சுகேந்திராவின் மாணவியர்களான செல்விகள் அஜித்தா சந்திரசேகரம், சிருஞ்சனா யோகராசா ஆகிய இருவருடைய நடனங்கள் இடம் பெறுகின்றன. இந்த நிகழ்விற்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். அலைகள் 11.04.2019

மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது

மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது; கொலை குற்றமா பண்ணிவிட்டேன் என்று குறும்பட விழா ஒன்றில் நடிகர் ராதாரவி பேசினார். சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள். மேலும், இப்பேச்சுக்காக திமுக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் ராதாரவி. நயன்தாராவும் அறிக்கையின் மூலமாக ராதாரவியை கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், சென்னையில் 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு'குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராதாரவி பேசியதாவது: சிங்கம் எப்போதுமே கர்ஜிக்கும். இயக்குநர் பேரரசு பேசுவதை ரசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால்,…

இந்திய பொதுத் தேர்தல் 2019 – தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

தற்போது தொடங்கியுள்ள மக்களவை தேர்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் இவைதான். 1.இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும். வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. 2.தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. 3.84.3 மில்லியன் புது வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்பார்கள். அதில் 15 மில்லியன் வாக்காளர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்கள். 2019ஆம் ஆண்டு வரை 900 மில்லியன் மக்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 4.பள்ளிக் கல்லூரித் தேர்வுகள், விழாக்கள், வானிலை அறிவிப்புகள் ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டே தேர்தலுக்கான தேதிகள் திட்டமிடப்பட்டுள்ளன…

தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி திடீர் அழுகை

தேர்தல் பிரச்சாரத்தினூடே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென கண்ணீர் விட்டு அழுதார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளில் தனி நபர் ஒழுக்கம், மது, புகை பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரம், சுற்றுச்சூழல் குறித்து அதிகம் பேசிய கட்சி பாமக. அதன் தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரது அறிக்கையும் அதிரடியாக நாள்தோறும் வெளிவரும். தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றும் கட்சியாக பாமக இருந்து வருகிறது. வடமாவட்டங்களில் பாமக துணை இல்லாமல் வெல்ல முடியாது, பாமகவால் தோல்வியைத் தவிர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிடையே மாறி மாறி கூட்டணி வைத்து கணிசமான இடங்களைப் பெற்று வந்தது பாமக. சி.வி.சண்முகம் மீதான தாக்குதல், அதிமுக தொண்டர் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதா பிடிவாதமாக வாபஸ்…

பிரச்சாரத்தில் குஷ்புவிடம் சேட்டை: தொண்டருக்கு பளார்

தன் அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்தார் குஷ்பு. தற்போது அண்ணனுக்கு உடல்நிலை கொஞ்சம் தேறியவுடன் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். முதலில் தேனி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார் குஷ்பு. அதனைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து குஷ்பு இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைத் தாண்டி குஷ்பு நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் தகாத முறையில் கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட நபரைக் கன்னத்தில் அறைந்தார் குஷ்பு. அருகில் இருந்தவர்களும், போலீஸாரும் உடனடியாக அந்த நபரைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. இதனை ட்விட்டர்வாசி ஒருவர் பகிர்ந்து,…

மோடி அரசு மீண்டும் அமையும் : பிரதமர் மோடி

முதல்கட்டத் தேர்தலில் நாடுமுழுவதும் மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் அலை வீசுவதை உணர முடிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம்…

அலைகள் உலக செய்திகள் 11.04.2019 வியாழன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற 28 நாடுகளின் தலைவர்களின் சந்திப்பின் பின்னதாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த பார்வை.. அலைகள் 11.04.2019