சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..

பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் தாக்குதல் நடக்கப் போகும் தகவல் தெரியாமல் போனது ஏன்..? சிறீலங்காவின் ஏப்ரல் 21 என்று கவலை.. அலைகள் 22.04.2019

இலங்கை குண்டுவெடிப்பு: 160 பேர் பலி..

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று தேவாலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து கொச்சிக்கடை சுட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. ஈஸ்டர் பண்டிகை; கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததையே ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கொழும்பில் உள்ள கிருஸ்தவ தேவாலயங்களில் காலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக கொச்சிக்கரை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலையம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும். குண்டுவெடிப்பு இந்த சமயத்தில் இன்று காலை 8.45 மணி அளவில் கொழும்பில்…

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல்

இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் 130 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது. உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்குபல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின. அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச்…