தமிழ் சினிமா செய்திகள் தொகுப்பு மூன்று..

தலையில் ஹெல்மெட், கைகளில் கிளவுஸ், கால்களில் பேட் இல்லாமல் ஆடும் இந்த விளையாட்டு ரஜினி ஸ்டைல் கிரிக்கெட்டாகிவிட்டது. அவர் நடிக்கும் தர்பார் பட ஷூட்டிங் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மும்பையில் தொடங்கியது. தேர்தல் நாளான்று சென்னை வந்த ரஜினி தனது வாக்கை பதிவு செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக ரஜினி மட்டும் படப்பிடிப்பிலிருந்த நிலையில் தற்போது நயன் தாராவும் பங்கேற்றிருக்கிறார். மும்பை பூங்கா பகுதி ஒன்றில் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் நெட்டில் வலம் வருகிறது. அருகில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இருக்கின்றனர். இது படத்திற்கான காட்சியா அல்லது படப்பிடிப்பு இடைவேளயில் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியாக ரஜினி விளையாடிய நிகழ்வா என்பதுபற்றி தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ரஜினியின் தர்பார் ஸ்டில்கள் அடிக்கடி லீக் ஆவது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.…

இயல்புநிலைக்கு திரும்பும் இலங்கை

இலங்கையில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் படிப்படியாக தணிந்து வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கை கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் கடந்த ஒருவாரமாக இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என அதிபர் சிறிசேனா குற்றம் சாட்டினார். இதனையடுத்து இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் இலங்கை காவல்துறை தலைவர் பூஜித்த ஜெயசுந்தரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.…

முஸ்லிம்களை ஓரங்கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் மிகமோசமான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன், இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தினரை ஓரங்கட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார். அத்துடன் சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு சம்பவங்கள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் வழங்கிய தகவல்களை அடுத்தே மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் மக்கள் தமது சமூகத்திற்குள் உருவாகியிருக்கும் தீவிரவாதத்தை விரும்பவில்லை. அதனை முற்றாக இல்லாதொழிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அவர்கள் முன்வந்திருக்கின்றார்கள். எனவே அதனைப் புரிந்துகொண்டு நாமனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தினம் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வேண்டாம் வெசாக் 50 விகாரைகளில் தற்கொலை தாக்குதல் அபாயம்

வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் வெசாக்தினத்திலும் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளுக்கு வெசக் தினத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவே…

இன்றைய காலை சிறீலங்கா செய்திகளின் தொகுப்பு

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று (29) அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. கிளிநாச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் சோதனையின் போது மீட்கப்பட்டது, கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர். இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ------------- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ்…

தாக்குதலில் தப்பிப்பிழைத்தார் இயேசுநாதர் சிறீலங்காவில் அதிசயம்

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 நாட்களாகின்றன. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தினம் முதல், தேவாலயம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் பாதுகாப்பு பிரிவினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன்படி, பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தேவாலயத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நேற்று ஊடகவியலாளர்கள் சென்றிருந்தார்கள். குறிப்பாக தேவாலயத்தின் வெளிபுறம் சற்று சேதமடைந்துள்ள போதிலும், தேவாலயத்தின் உட்புறம் முழுமையாக சேதமடைந்துள்ளதை அங்கு சென்ற ஊடகவியலாளர்களால் காணமுடிந்தது. குறிப்பாக சுவர்கள் சேதமடைந்துள்ளதுடன், குண்டு வெடிப்பினால் சுவர்கள் உடைந்துள்ளது. அத்துடன், தேவாலயத்தின் கூரையும் சேதமடைந்திருந்ததுடன், தேவாலயத்தின் கீழ் பகுதியும் சேதமடைந்துள்ளது. இலங்கை கடற்படையின் முழுமையாக ஒத்துழைப்புடன், புனித அந்தோணியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

இலங்கை தாக்குதல்களால் டென்மார்க் கலைஞர் சங்க விழா நிறுத்தம்

இலங்கையில் இடம் பெற்ற கோரமான தற்கொலை குண்டு தாக்குதல்களினால் தமிழ் மக்கள் பெரும் துயரடைந்துள்ளார்கள். டென்மார்க்கில் மூன்று பேர் இறந்த விடயம் டென்மார்க் என்ற நாட்டையே ஆட்டிவிட்டது. இந்த நேரம் நாம் கலைவிழா ஒன்றை நடத்துவது சரியா..? மக்கள் நெஞ்சங்களில் கவலை நிலவுகின்றது.. ஆகவே டென்மார்க் கலைஞர் சங்கம் நடத்த இருந்த பாடல் நடனப்போட்டி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெறுவதாலும்.. ஊரடங்கு சட்டத்தின் பிடியில் மக்கள் வாழ்வதாலும்.. இலங்கை போன மக்கள் போர்க்கால சூழலை அனுபவிப்பதாலும்.. நமது விழா நிறுத்தப்படுகிறது என்ற தொனி டென்மார்க்கில் புதிதாக இருக்கிறது.. டென்மார்க்கில் தினசரி அஞ்சலி நிகழ்வுகள் நடப்பது தெரிந்ததே. அலைகள் 28.04.2019

கொச்சிக்கடை அந்தோனியார் கோயில் பூஜைகள் நிறுத்தம்.

பிரதான கொலையாளி சகோதரர் கைது.. தேடப்பட்ட மூவர் நாவலப்பிட்டியில் கைது.. யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட நால்வர் கைது.. யாழ்ப்பாணத்தில் ஒரு பதுங்கும் குழி ஏன்..? மறுபடியும் போர்க்கால வாழ்வில் மக்கள்.. தேவையா இது.. சலிப்புடன் பலர்.. வெளிநாட்டில் இருந்து போகும் பலர் போவதா விடுவதா என்று தவிப்பு..! அதிரடி சிறீலங்கா செய்திகள்.. அலைகள் 28.04.2019