இன்று உலக அரங்கில் முக்கியம் பெற்ற செய்திகள் 19.03.2019

அமெரிக்க அதிபர் வெள்ளையின பயங்கரவாதம் என்று கூறாதது ஏன்..? உலகளாவிய சர்ச்சை.. கொலன்ட் கொலையாளி கைது.. இன்னும் பல தகவல்கள்.. அலைகள் 19.03.2019 செவ்வாய்

எதியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி உடையும் உண்மைகள்.. யுனிக் செய்தி

தமிழில் முதன் முறையாக சிறப்பு விளக்கங்களுடன் இங்கு மட்டும்.. இது யுனிக் எங்குமில்லாத தனித்துவ செய்தி.. அலைகள் 19.03.2019

மொஸாம்பிக் நாட்டில் பெரு மழை 1000 பேர் மரணம்..

மொஸாம்பிக், ஸிம்பாப்பே, மலாவி நாடுகளில் இடாய் என்ற புயல் வீசி பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மொஸாம்பிக்கில் இதுவரை 89 பேர்களின் மரணங்கள் ஊர்ஜிதமானது ஆனால் இறந்தோர் தொகை 1000 தொடும் என்று அந்த நாட்டின் றேடியோ மொஸாம்பிக் கூறுகிறது. பெய்ரா என்ற பெரிய நகரம் முற்றாக அழிந்துவிட்டது. சுமார் 90 வீதம் நாசம், விமான நிலையமும் செயல் இழந்தது. வெள்ளத்தால் நீர்த்துப் போன கட்டிடங்கள் இனி விழ ஆரம்பிக்கும், வாந்தி பேதி, போன்ற பல துயர்கள் தொடரப்போகின்றன. அலைகள் 19.03.2019

இசையே ஏமாற்றுவேலைதான்- இளையராஜா

ராத்திரியில் பூத்திருக்கும் பாடலையும் மாங்குயிலே பூங்குயிலே பாடலையும் அந்த மெட்டுக்கு இந்தப் பாட்டு இந்த மெட்டுக்கு அந்தப் பாட்டு என்று மாற்றிப் பாடினார் இளையராஜா. இசையே ஏமாற்றுவேலைதான் என்று ரகசியம் உடைத்தார். மாணவிகள் கரவொலி எழுப்பினார்கள். சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பல பாடல்களைப் பாடினார் இளையராஜா. விழாவில், ‘ஜனனி’ பாடலைப் பாடித் தொடங்கினார். அடுத்து மாணவி ஒருவர், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலைப் பாடுங்க ஐயா’ என்று கேட்க, ‘அவதாரம்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டுபோது என்ன வண்ணமோ’ பாடலைப் பாடினார். அந்தப் பாடலைக் கேட்டு, மாணவி ஒருவர் கரகரவென கண்ணீர் வழிய அழுதார். அவரைப் பார்த்து, ‘ஏன் அழறே?’ என்று கேட்டார் இளையராஜா. ‘இந்தப் பாட்டுங்க ஐயா’ என்றார் அழுதுகொண்டே.…

நீ ஹீரோதானே… ஏன் காமெடியன் மாதிரி பேசுறே?

நீ ஹீரோதானே. ஏன் காமெடியன் மாதிரி பேசுறே? ஏன் மனோபாலா மாதிரி பேசுறே?' என்று இளையராஜா நடிகர் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினார். திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்கிற இளையராஜாவுக்குப் பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன. இந்த விழா, தனியா சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், நடிகர் கார்த்திக் மேடையேறிப் பேசினார். அப்போது மனோபாலாவும் வந்தார். '' 'அலைகள் ஓய்வதில்லை' படத்துக்கு ஹீரோயின் உட்பட எல்லோரையும் தேர்வு செய்துவிட்டார் டைரக்டர் பாரதிராஜா சார். ஹீரோ மட்டும் சரியாக அமையவில்லை. அந்த சமயத்தில், உட்லண்ட்ஸில் காபி சாப்பிட்டுவிட்டு, போய்க்கொண்டிருக்கும் போது கார் பஞ்சராகிவிட்டது. எப்படியும் ஒருமணி நேரத்துக்கும் மேலே ஆகிவிடும் என்று சொல்லப்பட்டது. நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு எதிரே நடிகர் முத்துராமன் வீடு. அங்கே அவரது மகன் முரளி விளையாடிக்…

நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது. நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள். ஏராளமானவர்கள் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்து ஆஸ்திரேலிய வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேசர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசும்போது,…

வாரிசுகளுக்கு இடம் அளித்தது ஏன்? திமுக விளக்கம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்தே வாரிசுகளுக்கு இடம் அளித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வாரிசுகளுக்கு இடம் அளித்தது ஏன் என முரசொலியில் திமுக விளக்கம் அளித்திருக்கிறது. திமுக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி (வடசென்னை) தங்கபாண்டியன் மகள், தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர்), க.பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), கருணாநிதியின் மகள் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய 6 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 'குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள்' இந்நிலையில், திமுகவில் இருப்பது, 'குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள்' என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையாளரின் பெயர் சிலந்தி எனக்…

ஜெனீவாவில் என்ன நடக்கிறது.. கழுதையின் முன் தொங்கும் கரட்

மனித உரிமைகள் கழகத்தில் பிரிட்டன் ஆடும் நாடகம் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற கோணத்திலேயே இருக்கும்.. சிறீலங்கா அரசாங்கத்தை தண்டிக்காமல் தட்டிதட்டி மெல்ல நகர வைத்து, ஏதோ களிமண் பிடிக்க வருவதை கண்டு கொள்ளுமளவுக்கு தமிழ் மக்களை களைப்படைய செய்துவிடுவதாகவே இருக்கும். சிறீலங்கா அரசுக்கு போரை நடத்த 30 வருடங்கள் நிதி வழங்கி களைத்து பின் தாமே இறங்கிய மேலை நாடுகளுக்கு அங்கு அமைதியும் தாம் இறங்காமல் வராது என்பது தெரியும். ஆனால் அவர்களுக்கு இப்போது இலங்கையில் இலாபம் இல்லை.. ஆகவே ஆளாளுக்கு புசத்துவதே நடக்கும் என்பதே யதார்த்தம்.. தமிழ் படமொன்றில் பாடசாலையில் கொல்லப்பட்ட பிள்ளையை தேடி வரும் பெற்றோரை அங்கு இங்கு என்று அலைத்து கடைசியில் களைப்படைய வைத்து குற்றவாளியை தண்டிப்பதைவிட பிரேதத்தை தந்தாலே போதும் என்றளவுக்கு கொண்டு வருவதாக காட்டுவார்கள். அதுதான் ஜெனீவாவில்…

ஊழல் இல்லாவிட்டால் சிறந்த கிரிக்கட் அணி

கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினர் ஊழல்களில் ஈடுபடாமல் நேர்மையான முறையில் செயற்பட்டிருந்தால் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் ஓய்வுபெறும்போது சிறந்த கிரிக்கட் அணியொன்றை உருவாக்கியிருக்க முடியும் என ஐ.தே.க கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, தொழில்அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினர் ஊழல்களில் ஈடுபடாமல் நேர்மையான முறையில் செயற்பட்டிருந்தால் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் ஓய்வுபெறும்போது சிறந்த கிரிக்கட் அணியொன்றை உருவாக்கியிருக்க முடியும். கிரிக்கெட் விளையாட்டை பாடசாலை மட்டத்திலிருந்து விஸ்தரிப்பத்றகு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்காக காத்துக்கொண்டிருக்காது விளையாட்டுத்துறை அமைச்சர் பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய கிரிக்கட்…

ஐ.நா மனித உரிமைகள் அறிக்கை : நாளை இலங்கை பதில்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை பற்றி இலங்கை அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது. இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடுபற்றி உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற், அறிக்கையின் ஊடாக பிரஸ்தாபித்திருந்தார். இந்த மூன்று துறைகளிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி உயர்ஸ்தானிகர் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள விடயங்கள் பற்றி, இலங்கை பிரதிநிதிகள் நாளை விபரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வெளியுறவுச் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்ற ஜென்ரல் ஏநெறின்புள்ளே ஆகியோர் ஜெனீவா சென்றிருக்கின்றார்கள். அதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைபற்றி பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் பேரவையில் தீர்மானம் சமர்ப்பித்திருந்தன. இதற்கு அமைய குறித்த விடயங்களை அமுலாக்குவதற்கு இரண்டு வருடகால…