நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச் சூடுகள் 40 பேர் பலி..

நியூசிலாந்து கிறஸ்சேர்ஜ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இரண்டு மசூதிகளில் இன்று இடம் பெற்ற வெள்ளி தொழுகையின் போது துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை 40 பேர் பலி 27 பேர் படுகாயம்.. நான்கு சந்தேக நபர்கள் கைது அவர்களில் ஒருவர் பெண்.. பிரதான சந்தேக நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயது நபர், வெளிநாட்டவர் வெறுப்பு துவேஷம் கொண்டவர். மேலும் ஒரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் பொறுப்பதிகாரி மைக் புஸ் தெரிவிப்பு.. நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அட்றீன் கறுப்பு நாள் என்று கவலை வெளியிட்டார். 300 பேர் இருந்த மசூதிக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் தொடர் துப்பாக்கிப் பிரயோகம்.. மஜீட் அல் நூர் மசூதி.. லின்ட்வூட் மஸ்ஜிட் மசூதி ஆகியவையே தாக்குதலுக்குள்ளானவை.. இரண்டுக்கும் இடையே ஆறரை கி.மீ இடைவெளி. மேலும் தாக்கதல் நடக்கலாமென…

டி.எம்.எஸ் பாணியில் பாடுவோர் எண்ணிக்கை குறைகிறதா சந்திப்பு

டென்மார்க்கில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் டி.எம்.எஸ் குரலில் பாடி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் திரு. தர்மலிங்கமாகும். இரண்டு லிங்கங்கள் டி.எம்.எஸ் குரலில் பாடுவதாக போற்றப்படுகிறார்கள், அவர்களில் இன்னொரு லிங்கம் எஸ்.எஸ்.குணலிங்கம். மேலும் ஒருவர் ஜெயா அவரும் மிகச்சிறந்த பாடகராகும். அந்த வகையில் இன்று தர்மலிங்கம் அவர்களுடனான சந்திப்பு.. இந்தக் காணொளி முக நூலில் இப்போது பட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது.. அலைகள் 15.03.2019 வெள்ளி

மார்ச் 21 தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் அறிவிப்பு..

தோழர் செல்வா பாண்டியர் சாலை விபத்தில் மரணித்த ஓராண்டு நிகழ்வு நெருங்குகிறது. உலகம் முழுவதும் அவருடைய நினைவு நாள் தமிழர் ஒளியூட்டி நாள் என்ற பெயரில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் டென்மார்க் என்று இந்த நிகழ்வு தொடர்கிறது. தமிழகத்தில் பரமக்குடியில் வரும் 21.03.2019 வியாழன் மாலை 3.30 மணிக்கு ஏ.எம்.எம். மஹாலில் தமிழர் நடுவ தலைவர் தோழர் தங்கராஜ் பாண்டியர் தலைமையில் நடைபெற இருக்கிறது. டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல் தோழர் செல்வா பாண்டியர் அவர்களுடைய சிந்தனைகளை தாங்கிய புதுமைப்படைப்பாக வெளிவர இருக்கிறது. இது தொடர்பாக தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.. உலகத் தமிழர்களை தன் அறிவுப் பெரும் ஒளியால் இணைத்த தமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் செல்வா பாண்டியரின் இழப்பு தமிழினத்திற்கு…

தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் மலேசியா

தோழர் செல்வா பாண்டியர் சாலை விபத்தில் மரணித்த ஓராண்டு நிகழ்வு நெருங்குகிறது. உலகம் முழுவதும் அவருடைய நினைவு நாள் தமிழர் ஒளியூட்டி நாள் என்ற பெயரில் அனுட்டிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று இந்த நிகழ்வு தொடர்கிறது. டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல் தோழர் செல்வா பாண்டியர் அவர்களுடைய சிந்தனைகளை தாங்கிய புதுமைப்படைப்பாக வெளிவர இருக்கிறது. இது தொடர்பாக தமிழர் களம் மலேசிய வெளியிட்டுள்ள அறிவிப்பு..: ---------------------- தமிழர் தேசிய தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 21ஐ தமிழர் தேசிய ஒளியூட்டி நாளாக தமிழர் நடுவம் அறிவித்துள்ளது. இந்நாளை நினைவுகூரும் வகை எதிர்வரும் 23.03.2019 மாலை 6.00மணிக்கு Sentul Curry House உணவக அரங்கில் "தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்" எனும் தலைப்பில்…

பிரபல ஊடகவியலாளர் உங்களில் ஒருவன் லோகேஷ் வாழ்த்து

ஒரு காலத்தில் தாயகத்தின் பட்டி தொட்டி எங்கும் தனது இனிய குரலால் கட்டிப் போட்டவர் உங்களில் ஒருவன் லோகேஷ். ஐ.பி.சியால் வாழ் நாள் சாதனையாளராக கௌரவிக்கப்பட்ட இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் இவருடைய பணி அபாரமானது. யாழ். குடாநாட்டின் பல்வேறு இசைக்குழுக்களின் பாடல்களையும் தன் குரலால் அறிவிப்பு வழங்கி பாடல்களுக்கே புது மெருகு கொடுத்தவர். பின்னாளில் ஐ.பி.சியிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. ரியூப் தமிழ் எப்.எம். புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்வந்து அவர் வழங்கிய வாழ்த்து இதுவாகும். அலைகள் 15.03.2019 யாழ். Tube Tamil FM ஒலி- ஒளி ! ******************************** நான்கு மாடிகளுடன், காலக்கெதியில், ஐந்தாவது மாடியும் நன்குயர்ந்து ஒலி-ஒளி பரப்பி நல்லபல தகவற் களஞ்சியமென நிமிர்ந்து நிற்கப்போகும் Tube Tamil FM நிறுவனத்தின், தாயகத்தில் வாழும் இளையோரின் மறுமலர்ச்சிக்காக மலர்ந்து தமிழ்…