பிரபல காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

பிரபல காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நல குறைவால் காலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் டைப்பிஸ்ட் கோபு நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்த இவர் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சினிமா, சீரியல் வருகைக்கு முன் சுமார் 600-க்கும் அதிகமான மேடை நாடகங்களை நடத்தியவர் டைப்பிஸ்ட் கோபு. 1998-இல் இவர் நடத்திய ‘ரெய்ஸ் ஆன்’ என்ற நாடகம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது.

வயது முதிர்வு காரணமாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சென்னை, இராயப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த கோபு திடீர்ரென உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று திரையுலகப் பிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related posts