பரபரப்பாகும் ‘ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ்

படக்குழு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கவுள்ளது. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பேட்ட'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது இப்படம். 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின. தற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி. முதலாவதாக சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, அதனைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளதாக…

’ஏன் இப்படி வாசிக்கிறே; உனக்குதான் இந்த டியூன் தெரியுமே!’

ஏன் இப்படி வாசிக்கிறே. உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே’ என்று ரஹ்மானிடம் இளையராஜா செல்லக்கோபம் காட்ட, மொத்த அரங்கமும் சிரித்து அதிர்ந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. நேற்றும் இன்றும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று, ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ‘ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசிக்க, இசைஞானி இளையராஜா ஒரு பாடலைப் பாடுவார்’ என்று அறிவித்தார். உடனே இளையராஜா, மெளனராகம் படத்தில் இசையமைத்த ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார். உடனே ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பாடலுக்கான இசையை கீபோர்டில் வாசித்தார். மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் கரவொலி எழுப்பி, உற்சாகமானார்கள்.…

முஸ்லிம் காங்கிரஸ் – ரணில் இடையே கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரிமாளிகையில் சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அலி சாயிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தியிருந்தன. இந்த பின்னணியில், தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை அடங்கிய பிரேரணை ஒன்றை சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வெள்ளிக்கிழமை கையளித்திருந்தார். தேசிய அரசாங்கமொன்றின்…

கணவன் சடலத்தை பார்த்து சிரித்த மனைவி

ஆந்திராவில் தனது கணவரின் சடலத்தை பார்த்து மனைவி சிரித்ததால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், கணவரை கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், அர்த்தவீடு மண்டலம், நாகலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகன்மோகன் ரெட்டி (40). இவரது மனைவி ரஜினி (35). இந்நிலையில், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் வெங்கடராமா ரெட்டியுடன் ரஜினி நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனால், தங்களுக்கு இடையூறாக உள்ள ஜகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய அவர்கள் இருவரும் திட்டமிட்டனர். இதற்காக, கூலிப்படையினருக்கு அவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். பின்னர், வெங்கடராமா ரெட்டி, கடந்த 2 நாட்களுக்கு முன் ஜகன் மோகன் ரெட்டியை தனது காரில் தனியாக அழைத்துச் சென்றார். பின்னர், ஆத்மகூரு வனப்பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு மயக்க ஊசி போட்டுள்ளார். இதில்…

திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்குச் செய்தது என்ன?

பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதெல்லாம் கீழ்த்தரமான அரசியல், இத்தனையாண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்குச் செய்தது என்ன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை பாரதிய ஜனதா கட்சி நடத்தி வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அதன்ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என நினைப்பவர் பிரதமர் மோடி ஆவார். அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும் என…

சுதந்திரதினம் கரிநாளா இல்லையா மாணவர் சுமந்திரன் வேறு வேறு கருத்துக்கள்

தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பதை தவறானது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நாளைய தின எதிர்ப்பு நடவடிக்கைகளை தாம் முற்றாக எதிர்ப்பதாவும் எதிர்ப்பு கூட்டங்கள பகிஷ்கரிப்பதாகவும், தேசிய உணர்வுகளை வைத்துக்கொண்டே இலக்குகளை வெற்றிகொள்ள வேண்டும் எனவும் கூட்டமைப்பு கூறுகின்றது. தேசிய சுதந்திரதின நாளான் இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் இன்றைய நாளில் யாழ்பானம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வடக்கு முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை இவ்வாறு…

ஜனாதிபதி தவறுவிட்டாலும் நாம் அதே தவறை விடப்போவதில்லை : சுமந்திரன

ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாங்கள் எமது கொள்கையையோ முயற்சியையோ கைவிடப் போவதில்லை. அரசியலமைப்பு விடயத்தில் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கின்ற போது இப்போது நடப்பது சாதியமில்லை என ஜனாதிபதி சொல்வதை வைத்து இதனைக் கைவிட நாங்கள் தயாராக இல்லை. ஜனாதிபதி முழு நாட்டுக்கும் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வாகரையில் நேற்று (02) மாலை இடம்பெற்ற பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு அறிக்கை வெளிவந்த போது தெற்கிலே உள்ள பேரினவாதிகள் இந்த நாட்டை பிரிக்கப் போகின்றது என்று கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எம்மவர்கள் மத்தியில் இருக்கின்ற…

வடக்கில் போதைப்பொருட்கள் விதைக்கப்பட்டுள்ளன

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்லரன் தெரிவித்தார். மன்னார் - அடம்பன் மகா வித்தியாலயத்தில் நேற்று (02) மாலை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கின்றார்கள். இதற்கு காரணம் அரசியல் வாதிகள். தங்களுடைய சுய இலாபத்திற்காக தங்களுடைய வாகனங்களிலே போதை பொருட்களை கொண்டு செல்கின்றார்கள். உண்மையிலேயே அரசியல் வாதிகளுடைய வாகனங்கல் பெரிதும் சோதிக்கப்படுவதில்லை. பாரளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று குறிப்பிடும் போது பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை சோதனையிடுவதில்லை.…

அலைகள் உலகச் செய்திகள் 03.02.2019 ஞாயிறு காணொளி

டென்மார்க்கில் றோபேக்கள் பணியாற்றும் புகழ் பெற்ற முதியோர் இல்லம் உள்ள கேர்னிங் நகரின் பூலசங் சூய் ( பறவைகள் பாடும் ஏரி ) பக்கமாக நின்று தரப்படும் இன்றைய முக்கிய உலகச் செய்திகள். அலைகள் 03.02.2019