சுதந்திரதினம் கரிநாளா இல்லையா மாணவர் சுமந்திரன் வேறு வேறு கருத்துக்கள்

தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பதை தவறானது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நாளைய தின எதிர்ப்பு நடவடிக்கைகளை தாம் முற்றாக எதிர்ப்பதாவும் எதிர்ப்பு கூட்டங்கள பகிஷ்கரிப்பதாகவும், தேசிய உணர்வுகளை வைத்துக்கொண்டே இலக்குகளை வெற்றிகொள்ள வேண்டும் எனவும் கூட்டமைப்பு கூறுகின்றது.

தேசிய சுதந்திரதின நாளான் இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் இன்றைய நாளில் யாழ்பானம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வடக்கு முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை இவ்வாறு தெரிவித்தது.

———-

நாளைய சுதந்திர நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி, எதிர்ப்பை வெளியிடுவதுடன், போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பபிலராஜ் தெரிவித்தார்.காணாமல் போனோர் விவகாரம், காணி உரிமை விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. இதன் காரணாகவே மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளைய சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, போராட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு சில பொது அமைப்புக்களுடன் இணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது. இவ்விடயம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

——–

சுதந்திரதின நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்கட்சியினர் என்ற வகையில் கலந்து கொள்வது தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

71 ஆவது சுதந்திர தினத்தினை அரசாங்கம் தேசிய சுதந்திர தினமாக பெயர் குறிப்பிட்டுள்ளமையானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts