உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு - காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணத்தை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது. முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. நாளை முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து- யாழ்ப்பாணம் 11.50 மணிக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு காலை 6.10 மணிக்கும் புறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒற்றை ஆட்சியை முன்னரே ஏற்றிருந்தால் தீர்வு வந்திருக்கும் ரணில்

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளாததே இதுவரை அரசியல் தீர்வை அடைய முடியாது போனதற்கு காரணமாகும். ஆனால் சரித்திரத்தில் முதல் தடவையாக அனைத்து அரசியல் சட்சிகளும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க களுத்துறையில் தெரிவித்தார். இவ்வாறான வெற்றிக்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டதா​லேஎன்றும் சுட்டிக்காட்டினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 474 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட களுத்துறை வர்த்தகத் தொகுதியையும் பொது சந்தை தொகுதியையும் திறந்து வைத்த பின்னர் களுத்துறை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே கூறினார். இன்றுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் நாட்டை பிரிக்காது நாட்டை பிரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இணைந்து அரசியலமைப்பு சபையொன்றை அமைத்துள்ளன. அதன்படி அனைவரும் இது தொடர்பாக அனைவரும் ஒருமைப்பாட்டுக்கு வரமுடியுமாவென கலந்துரையாட…

முரண்பாடுகள் தீர்க்கப்பட்டாலே கிழக்கை கட்டியெழுப்பலாம்

கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் ஏற்பாடு செய்த ”போதைப் பொருளிலிருந்து விடுதலையான நாடு” எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நேற்று (28) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், போதைப் பொருளை விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள், பொலிஸார், அதிகாரத்திலுள்ளவர்கள் போதைவஸ்தோடு தொடர்புள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது. இன்னும் 10 அல்லது 15 வருடங்கள் ஆகும் போது இளைஞர் சமூகத்தை இழக்க…

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு தேவையான நிதி

வரவு- – செலவுத்திட்டத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கம் எதையும் செய்யவில்லை. எனினும் வடக்கு , கிழக்கி அபிவிருத்திக்கு அவசியமான நிதியை வழங்குவோம் என பொதுநிர்வாக இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். வடக்கு , கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாம் அதனை மேற்கொள்வோம். அதற்குத் தேவையான நிதியையும் வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு பேட்டியளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் வாக்களித்து வந்துள்ளனர். அதனால் மைத்திரிபால சிறிசேன எமது பொது வேட்பாளராக களமிறங்கியதால் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைத்தன. இந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியென்பது அனைத்து இன, மத மக்களையும் கொண்ட கட்சியாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யாரை…

துப்பாக்கி சூட்டிற்கு பயந்து கடலில் குதித்த இருவர் மாயம்

கிண்ணியா கங்கைப் பாலம், கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதனால் குறித்த இளைஞர்கள் மூவரும் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கடற்படையின் அதிகாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன இரு இளைஞர்களும் கிண்ணியா இடிமன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் சேர்ந்து கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு பொலிஸார் உட்பட முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ…

காங்கேசந்துறைக்கு செல்லும் பிரதமர்

காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசந்துறை செல்ல உள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். காங்கேசந்துறை துறைமுகம் 2021 ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் இருந்து சலுகை அடிப்படையில் கிடைத்த நான்கு கோடி 50 இலட்சம் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அபிவிருத்தி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசந்துறை செல்ல உள்ளார். காங்கேசந்துறை துறைமுகம் தற்சமயம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புதிய வாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

அலைகள் ஒரு வார உலகச் செய்திகள் ஒரே பார்வையில் தரப்படுகிறது

அனேகரின் வேண்டுதலுக்கு இணங்க இன்று முதல் அலைகளில் வரும் உலகச் செய்திகள் திங்கள் முதல் வெள்ளி வரையான ஐந்து தினங்களின் செய்திகள் ஒன்றாக தொகுத்து தரப்படுகின்றன. இன்று கடந்த வாரம் 21.01.219 முதல் 25.01.2019 வரையான காலப்பகுதியின் உலகச் செய்திகள்.. அலைகள் 29.01.2019

நிலா முற்றம் டென்மார்க்கில் நடந்த கவியரங்கம்

டென்மார்க் பரடைசியா நகரில் நிலாமுற்றம் என்ற கவிஞர்களின் கவியரங்க நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 27.01.2019 ) மிகவும் சிறப்பாக நடந்தேறியது. நிலா முற்றம் என்ற அமைப்பானது டென்மார்க்கில் முதன் முறையாக தனது கவியரங்கை நிகழ்த்துகிறது என்று கருதி போயிருந்தோம். நிலா முற்றம் என்ற பெயரை வேறும் எங்கோ கேட்டிருக்கிறோமே அது வேறு இது வேறா என்று எண்ணியபடியே அரங்கிற்குள் நுழைந்தபோது அங்கு காண்பிக்கப்பட்ட காணொளி அனைத்து கேள்விகளுக்கும் விடைதந்தது. தமிழகத்தில் இருந்து கவிஞர்கள், நிலாமுற்றம் அமைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கியதும், புலம் பெயர் நாடுகளில் இருந்து பல கவிஞர்கள் வாழ்த்து செய்திகளை பதிவாக்கியதும் அங்கு காணொளி மூலம் பார்த்தும் கேட்டும் உணரக் கூடியதாக இருந்தது. ஆக நிலா முற்றம் என்பது தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெளிநாடுகளுக்கு பரவலாக்கம் பெறும் ஓர் கவிதை ஆர்வலர் அமைப்பு என்பதை அந்த…

வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 04 ( 28.01.2019 )

உன் சுயமரியாதையை இழந்துவிடாதே..! உங்கள் சுயமரியாதையை உங்கள் நடத்தையால் நீங்களே குறைத்துக் கொள்ளலாம். அல்லாவிடில் இன்னொருவர் வேண்டுமென்றே குறைக்கும்போது, அதை அறியாமை காரணமாக நீங்களும் ஏற்றுக் கொள்ளும்போது இயல்பாகவே தோற்றுப் போய்விடுகிறீர்கள். எதிர்மறையாக எண்ணுதல், தன்னைத்தானே இயலாவாளி என்று தாழ்வாக மதிப்பிடுதல் போன்ற பழக்கங்களை நீங்கள் உங்கள் இளமைக்கால வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்ததா..? சிலவேளை நீங்கள் தாக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு துயர் சுமந்த வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்கள் மிக அருமையாகவே பாராட்டப்பட்டிருக்கலாம். கீழ்மைப்படுத்த முயல்வோரால் நீங்கள் ஒரு முட்டாள் என்று கருதுமளவுக்கு வீழ்த்தப்பட்டிருக்கலாம். இத்தகைய பாதகமான சமுதாய போக்கினால் உங்கள் முதலிடம் பறிபட்;டுப்போயிருக்கலாம். அதுபோல உங்கள் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டும் போயிருக்கலாம். மற்றவர்களின் இகழ்ச்சிகளை கேட்டுக் கேட்டே அதுதான் நீங்கள் என்ற முடிவுக்கு நீங்களே வந்தும் இருக்கலாம். இந்த கடந்தகால எண்ணங்கள் உங்களை பெறுமதியற்ற ஒருவராக்கிவிடும் மறந்துவிடாதீர்கள். இவைகளை எண்ணி…

மரண அறிவித்தல் திரு. தில்லையர் யோகசாமி ஓய்வுநிலை அதிபர்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையர் யோகசாமி அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற தில்லையர், மயிலி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கோபால் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கராணி அவர்களின் பாசமிகு கணவரும், ரவீந்திரன்(வலயக்கல்வி பணிப்பாளர்- வடமராட்சி), பாபு(சுவிஸ்), ரதி(கனடா), கோபு(சுவிஸ்), ராகுலன், ராதா(ஆசிரியை- யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயராணி(ஆசிரியை- யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி), நளினி(சுவிஸ்), குகதாசன்(கனடா), சிவனேஸ்வரி(சுவிஸ்), மங்களஜெயா, ரவீந்திரன்(பிரதி அதிபர்- யா/தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ராகவேந்திரன், ராகவர்ஷிதன், பாரத், நிலானி, பிரியந், பிரியங்கா, பிரவண்யா, பிரவீன், மாதுளா, மதுமிதா, மகிழினி, கயல்நிலவன், கயலத்தேவன், கயல்வீணா, திவ்யாஞ்சன், ஸ்வப்ரதாரா, ஹர்ஷப்ரதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று…