இந்த ஆண்டு தமிழ் சினிமா 25 முக்கிய துளித்தகவல்கள்

01. ஒரே ஆண்டில் ரஜினி நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வந்தன. 02. கமல் நடித்த திரைப்படம் விஸ்வரூபம்-2 மட்டுமே வந்தது. 03. அஜித் நடித்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட வரவில்லை. 04. விஜய் நடித்த சர்க்கார் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி 250 கோடியை வசூல் செய்தது. 05. தமிழ் சினிமாவில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படமான 2 0 நவம்பர் 29ஆம் தேதி வெளியானது. 06. இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி அவர் நடித்தது 5 படங்கள் . 07. அதிக படங்களில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி நடித்த 5 படங்கள் 08. அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் டி எஸ் அவரது இசையில் 8 படங்கள் வெளிவந்தன 09. இரண்டாம்…

ராணாவுடன் திரிஷாவை இணைத்து வைப்பேன்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா நடித்திருந்தனர். இரண்டு பாகங்களில் உருவான இப்படம் திரையுலகில் வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் பிரபாஸ், ராணா, ராஜமவுலி மூவரும் இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பல்வேறு கேள்விகளை அவர்களிடம் கேட்டார் கரண். மாஜி கேர்ள்பிரண்ட் திரிஷாவுடனான உறவுபற்றி கரண் கேட்டதற்கு பதில் அளித்த ராணா,’10 வருடமாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம். நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்தாலும் குறைந்த நாட்கள்தான் டேட்டிங்கில் ஈடுபட்டோம். ஆனால் அது எங்களுக்குள் சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை’ என்றார். ‘அனுஷ்காவுடன் காதலா?’ என்று பிரபாஸிடம் கேட்டபோது,’ அனுஷ்கா மிகவும் கவர்ச்சிகரமான நடிகை. நாங்கள் நண்பர்கள்தான். காஜல் அகர்வால், தமன்னாவும் எனக்கு மிகவும் பிடிக்கும். ராணாவுடன் அவரது மாஜி கேர்ள் பிரண்ட் திரிஷாவை நான் இணைத்து வைப்பேன்’ என்றார். ‘இந்தியில் பாகுபலி…

25 நிமிடத்தில் 2 மில்லியன் பார்வைகள் ‘விஸ்வாசம்’

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ட்ரெய்லருக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 30) பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் இடம்பெற்றுள்ள 'ஒத்தைக்கு ஒத்த வாடா' என்று அஜித் பேசும் வசனங்கள் ஆகியவை பொங்கல் விருந்தாக இருக்கும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'விஸ்வாசம்' படத்தின் ட்ரெய்லர் வெளியான 12 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளையும், 25 நிமிடங்களில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது சத்யஜோதி நிறுவனம். இப்படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. 'விஸ்வாசம்'…

எனது குழந்தைகள் போராடும் குணம் கொண்டவர்கள்

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சனா ஜோலி தனது குழந்தைகள் போராடும் குணம் படைத்தவர்கள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். ஏஞ்சனா ஜோலி இன்று பிபிசி வானொலிக்கு ஒரு நேர்காணல் அளித்துள்ளார். அதில் தனது குழந்தைகளின் நிறைகுறைகளை வெளிப்படையாக பேசியுள்ளார். நேர்காணலில் ஏஞ்சலினா பேசியதாவது: எனது குழந்தைகள் ஒரு நல்ல போராடும் குணம் கொண்டவர்கள். அது மிகவும் அதிசயமும் அசாதாரண ஒன்றும் ஆகும். அதேநேரம் குழந்தைகள் மிகமிக சரியாக நடந்துகொள்ள வேண்டுமென்று நான் எப்போதுமே விரும்புவதில்லை. குழந்தைகள் இரண்டு காரியங்களை செய்ய முடியும். ஒன்று அவர்கள் கூட உங்களை வளர்க்கலாம். அதேநேரம் அவர்கள் மிருக உணர்வைக்கூட பெறலாம். அவர்கள்தான் தங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி எனக்குள்ள ஒரே கவலை அவர்கள் அதிகம் சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள் என்பதுதான். இவ்வாறு ஏஞ்சலினா ஜோலி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏஞ்சலினாவின்…

பிரபஞ்சனுக்கு அஞ்சலி செலுத்தும் எஸ்.ராமகிருஷ்ணன்

சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட எழுத்துப் பணியைக் கையில் மீண்டும் நான் எடுப்பதே பிரபஞ்சனுக்கு செலுத்தும் அஞ்சலி என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். புதுச்சேரியில் இராதே அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்று எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பேசியதாவது: ''தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு நியாயமான வாழ்க்கை கிடைக்கவில்லை. துயர வாழ்க்கையே பொதுவிதியாக தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளது. நான் உட்பட பலருக்கும் துயரப் பாதையில் மோதிதான் செல்லும் சூழல் உள்ளது. இருந்தாலும் அதில் எப்புகாரும் இல்லாமல் வாழ்ந்தார் பிரபஞ்சன். 40 ஆண்டு கால சென்னையில் அவர் வாழஜ் காரணம், எழுத்தாளராக ஒரு இடம் பிடிக்கத்தான். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக விரும்பியே வந்தார். ஆனால் திரைத்துறை அவரை அவமதித்து துரத்தியது. அதையடுத்து எழுத்தாளரானார். இலக்கியத்தில் அவர் கதாநாயகரானார். எழுத்து வழியாக அவர் எப்போதும்…

மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால் புதிய அரசமைப்பு புத்துயிர்

மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால் புதிய அரசமைப்பு புத்துயிர் என்று சுமந்திரன் எம் பி கூறியிருக்கின்றார். எதிர்வரும் மாசி 4 ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஜேவிபியும், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து புதிய அரசமைப்புக்கான ஒரு வரைபை வெளியிடுவோம் என அவர் கூறியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்- கடந்த நவம்பர் 7 ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபை தடுப்பதற்காகவே மஹிந்தவை பிரதமராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜனாதிபதி. 19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்ற நடவடிக்கைகளை செய்திருந்தார். 19ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் இன்னும் இருப்பது போன்று ஜனாதிபதி இந்த தீர்மானங்களை எடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க நீதிமன்றம் சென்றதற்காக…

சர்க்கரை வியாதி ஆபத்தில் டென்மார்க் கர்ப்பிணி பெண்கள்

டென்மார்க்கில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் பலர் சர்க்கரை வியாதி இலக்கம் இரண்டில் சிக்குண்டு துயர்படும் ஆபத்து இருப்பதாக இன்றைய காலைச் செய்தி தெரிவிக்கிறது. காரணம் கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவது டென்மார்க்கில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2008ம் ஆண்டு 1758 கர்ப்பிணிகள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தனர், 2014ல் இந்தத் தொகை 2059 ஆக உயர்ந்தது 2017ம் ஆண்டு 2532 ஆக எகிறியிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு சர்க்கரை வியாதி - 2 ஐ சந்திக்க பல காரணங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான காரணம் இப்பெண்கள் அளவுக்கு மீறிய நிறை கொண்டிருப்பதாகும். 2017ம் ஆண்டு கணக்குகளின்படி டென்மார்க்கில் ஒவ்வொரு மூன்று பெண்களுக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் நிறை கூடிய பெண்களாக இருக்கிறார்கள். இதனால் சர்க்கரை வியாதி - 2 ற்கான ஆபத்து அதிகமாகவே இருக்கிறது. தாய் சர்க்கரை…

இந்த ஆண்டு புயலடித்த உலகம் என்ற பட்டப் பெயருடன் விடை பெறுகிறது.

கடந்து போகும் 2018ம் ஆண்டு பத்து பெரிய புயல்களினால் உலகம் தாக்கப்பட்ட ஆண்டாக இருக்கிறது. 1997 ம் ஆண்டுக்கு பின்னர் அதிகமான பெரும் புயல்கள் வீசிய ஆண்டாகவும் இருக்கிறது. பெரும் புயல் அல்லது சூப்பர் புயல் என்றால் என்ன..? எல்லாமே புயல்தானே என்று கருதிவிடக்கூடாது. புயலின் அழிவு, புயல்கண்ணில் காற்றின் வேகம், கொட்டும் மழை போன்றன அசாதாரணமாக இருக்க வேண்டும். மணிக்கு 290 கி.மீ வேகத்தில் பாய்ந்து வரும் புயல்கள் தரம் 5 என்று மதிப்பிடப்படுகிறது. பொதுவாக புயலின் தரம் 4 என்றாலே ஆபத்துத்தான், போதாக்குறைக்கு அது சன்னதமேறி 5 வது படிநிலைக்கு போனால் அவ்வளவுதான், முழு இடங்களையும் பரிநாசம் செய்துவிடும். உதாரணம் இந்த ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிலிப்பைன்சில் அடித்து நொருக்கிய மங்குட் சூறாவளி 134 பேரை கொன்று தள்ளியதே அது. அதுபோல ஜப்பானில்…

டென்மார்க்கில் பிள்ளைகளை பெற்றோரே பராமரிக்க பணம் வழங்க ஏற்பாடு..

டென்மார்க்கில் பிள்ளைகள் பராமரிப்பு என்பது எப்போதுமே பிரச்சனைக்குரிய விடயமாகவே இருந்து வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த காலத்திற்குக் காலம் பற்பல யோசனைகள் வெளியாவதும் வழமை. இதுபோல ஒரு யோசனை இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோரே தமது பிள்ளைகளை பராமரிக்க முடியும். இதற்காக அவர்களுக்கு நகரசபை சம்பளமும் வழங்கும். 1868 குறோணர்களில் இருந்து 7481 குறோணர்கள் வரை இந்த சம்பளமானது வேறுபடுகிறது. இத்தகைய ஏற்பாட்டிற்கு டென்மார்க்கில் உள்ள 98 நகரசபைகளில் அரைப்பங்கு நகரசபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. வரும் முதலாம் திகதி மேலும் மூன்று நகரசபைகள் இணைகின்றன. பிள்ளைகளை சுமார் 24 வாரங்கள் பராமரிக்க இந்த ஏற்பாடு வழி செய்வதாக செய்திகள் கூறுகின்றன. பிறந்த பிள்ளையை வோக்கஸ்ரூவ என்ற பராமரிப்பிற்கு ஒப்படைப்பதை தாமதித்தல், அல்லது பாடசாலை போக முன்னர் வரும் ஆறு மாதங்களில் பராமரித்தல் என்று பல பிரிவுகள் உள்ளன.…