கறுப்பு ‘மேக்அப்’பில் நயன்தாரா

நயன்தாரா என்றாலே அவரது ஸ்லிம் தோற்றம், வசீகரமான முகம்தான் நினைவுக்கு வரும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து திகில் படமொன்றில் நடிக்கிறார். இதில் இரட்டை வேடம் ஏற்கிறார். ஒரு கதாபாத்திரத்தில் கவர்ச்சியான தோற்றத்திலும் மற்றொரு பாத்திரத்தில் கறுப்பு மேக்அப் அணிந்தும் நடிக்க உள்ளார். ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்குகிறார். இதுபற்றி இயக்குனர் கூறியது: புதிய ஹாரர் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதில் இரட்டை வேடம் ஏற்கிறார். ஒரு கதாபாத்திரம் வழக்கமான தோற்றத்திலும், மற்றொரு கதாபாத்திரத்தில் கிளாமரை குறைத்துக்கொண்டு மாறுபட்ட தோற்றத்திலும் நடிக்கிறார். இதுவரை இதுபோன்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியதில்லை. அயராவதம் என்ற ஒரு மாய தோற்ற யானையின் பின்னணியிலிருந்து உருவாகியிருக்கும் கதை. அந்த யானைதான் யானைகளின் ராஜாவாக கருதப்படுகிறது. இது நயன்தாராவின் கதாபாத்திரத்தின்…

அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும்

அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது என தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். மீடூ இயக்கம் என்ற பெயரில் நடிகர்கள் ,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. மீடூ விவகாரத்தில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் பிரபலமான கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் ஒன்று வந்ததாக பாடகி சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதில் ஒரு பெண், வைரமுத்துவிற்கு சொந்தமான ஹாஸ்டலில் தான் தங்கியிருந்த போது அவர் தன்னிடம் அத்துமீறீ நடந்துக்கொண்டார் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி…

அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனது

அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி கூறி உள்ளார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று பல நடிகைகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மீடூ விவகாரத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை நடிகைகள், மீடியாவில் உள்ள பெண்கள் வெளியிட்டு வருகிறார்கள். மீடூ இயக்கத்திற்கு தமிழ் சினிமாவில் சமந்தா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். பாலிவுட் பிரியங்கா சோப்ரா, ஹிர்திக் ரோசன் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இயக்குனர் மணிரத்தினம் படங்களான காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி தான் அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-…

உடனடியாக விடுதலை செய்- சம்பந்தன்

குற்றம் இளைத்தவரகளாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருபவர்காக இருக்கலாம், ஆனால் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார். இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், காலம் தாழ்த்தியேனும் இந்த காரியாலோம் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. காரியாலையம் உருவாக்கப்பட்டு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், இழப்பீடுகள் மற்றும் மீண்டும் இவை இடம்பெறாமை என்பன நிலைமாறு பொறிமுறையின் அம்சங்களாகும். இவை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியமம் பெறுகின்றது. இந்த சட்டமூலம் வரவேற்கதக்க விடயம். ஆனால் இது நீதியை புறக்கணிக்கும் வகையில் அமையக் கூடாது. இழப்பீடுகள் குறித்த காரியாலையம் மூலமாகவேனும் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சஜித் எதிர்கால ஜனாதிபதியாக வர கூடியவர் ; யாழில் மனோ

வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பகையாளியாக என்னை பார்க்காதீர்கள் வடக்கு கிழக்கில் பல தமிழ் கட்சிகள் உண்டு. எம்மை பகைமை உணர்வோடு பார்க்காதீர்கள் நட்புடன் பாருங்கள். பகைமை முரண்பாட்டு இருக்க கூடாது நட்பு முரண்பாடு இருக்கலாம். பகைமை முரண்பாடு இருந்தால் அது எதிரிக்கு தான் வாய்ப்பு. பகைமை முரண்பாட்டுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனை பார்க்காதீர்கள். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எனது இரத்தத்தின் இரத்தங்கள். அவர்களுக்கு துன்பம் துயரம் வந்தால் எனக்கு வலிக்கின்றது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே உணர்வால் ,…

ரூ.4 ட்ரில்லியன் கடன் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு அரசாங்கம் 4 ட்ரில்லியன் ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இது கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடனெனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பொருளாதாரத்திலும் நிதிநிலையிலும் மிக மோசமான நிலைக்கு நாட்டை இட்டுச்சென்ற கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று சிறுபிள்ளைகளைப் போல் அனைத்தையும் மறந்து நாட்டின் பொருளாதாரத்தை விமர்சித்து வருவது விந்தையாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சியானது நாட்டின் முழுப் பொருளாதாரமும் படுவீழ்ச்சியடைந்துள்ளதாக விமர்சித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. நாட்டில் இது தொடர்பில் மோசமான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். 2015 ஜனவரி 8ம் திகதி நாம் அரசாங்கத்தைப் பாரமெடுத்த போது நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு இருந்தது என்பதை அவர்கள் மறந்து பேசுகின்றனர். நாம் நாட்டின் பொருளாதாரம் மற்றும்…

அரசுக்கு உள்ளே நடக்கும் போராட்டங்கள் வெளியே தெரிவதில்லை

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதுடன் அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் போராட்டங்களில் பங்கெடுத்தும் வருகின்றோம் என கூறியுள்ள அமைச்சர் மனோகணேசன், அரசுக்கு உள்ளே நடக்கும் போராட்டங்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அரசுக்கு வெளியே நடக்கும் போராட்டங்கள் வெளியே தெரிகின்றன. அதனால் அவை பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனவும் கூறியிருக்கின்றார். யாழ். குடா நாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மனோ கணேசன் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு சார்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் போராட்டங்கள் நடாத்தப்படுகின்றன. இதற்காக நல்லிணக்க அமைச்சர் என்ற அடிப்படையில் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 10.10.2018 புதன்

01. மத சகிப்புத்தன்மையற்ற பழக்கங்களை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு போதிக்கக் கூடாது. மதம் சார்ந்த விடயங்களில் ஒத்துப்போக முடியாதபோதுதான் ஒருவரை ஒருவர் அழிக்க முயலும் கொடிய போர்களுக்குள் மக்கள் போகிறார்கள். 02. நமக்கு பூமியில் வாழ ஒதுக்கப்பட்ட காலம் மிகவும் சொற்பமானது. ஒரு மெழுகுவர்த்தி எரியும் காலத்தைப் போல மிகவும் குறுகலானது. இதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மரணம் என்ற அறிவிப்பு வரும்போது மரணம் என்ற பயணக்குழுவினருடன் போக வேண்டி வரும் ஆகவே இப்போதே கிடைத்த மணிகளை சிறப்பாக பயன்படுத்துங்கள். 03. உலகில் நிலவிவரும் குழப்பம், கலவரம் போன்றவை யாவும் எதனால் உருவாகுகின்றன ? சகிப்பு தன்மை இல்லாத காரணத்தினால் உருவாகின்றன. முதலில் நமக்குள் உள்ள விரோதம், அறியாமை, மூடத்தனம் போன்ற சில்லறைத்தனங்களை கை கழுவி விட்டுவிட வேண்டும். 04. ஏதோ ஒரு தலைவிதி நம்மை…

வல்வை ஒன்றியம் டென்மார்க் கோடைகால ஒன்றுகூடல் ( புகைப்படங்கள் )

வல்வை ஒன்றியம் டென்மார்க்கின் கோடைகால ஒன்றுகூடல் கடந்த 06.10.2018 சனிக்கிழமையன்று மதியம் முதல் கேர்னிங் நகரில் உள்ள டுவகூஸ் இல்லத்தில் அமர்க்களமாக நடைபெற்றது. வல்வை ஒன்றியம் டென்மார்க் வருடம் தோறும் கோடைகாலம் குளிர்காலம் ஆகிய இரண்டு பருவங்களிலும் ஒன்றுகூடல்களை சிறப்போடு நடத்தி வருகிறது. ஊர் உணர்வுகளை பரிமாறுதல், உணவுகளை ஊர் முறையில் தயாரித்தல், ஊரில் உள்ள பொது அமைப்புக்களுக்கு உதவுதல் என்று பரந்துபட்ட பணிகளை செய்து வருகிறது இத்தாபனம். இந்த முறையும் வல்வை மகளிர் மகாவித்தியாலயத்திற்கான ஸ்மாட் ரூம் என்ற நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறையை அமைப்பதற்கு உதவி வழங்க இருக்கிறது. சிறுவர் விளையாட்டுக்கள், ஒடியல்கூழ், வல்வை பலகாரங்கள் என்று விழா களைகட்டியது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ..? என்ற வரிகளே ஒன்றுகூடலை பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. இதோ புகைப்படங்கள் சில.. அலைகள் 10.10.2018

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 40

தேவனுடைய உண்மையும் நம்முடைய பாதுகாப்பும் சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார். சங். 121:7. புதிய மாதத்தில் ஆசீர்வாதமான சிந்தனையுடன் அலைகள் வாசகநேயர்களை ஆசீர்வாதமான வாழ்வை அடைந்து கொள்படியாக அழைத்துச் செல்கிறேன். நாம் வாழும் இந்த பூமி தீங்குநிறைந்த ஓர் இடமாகும். பலகொடிய நோய்கள், கொடிய தீயமனிதர்கள், விபத்துக்கள், தீங்குகள், மந்திரதந்திர கெடுதிகள் இப்படியாக பலதீங்கான காரியங்களை நாம் அடுக்கிக்கொண்டு போகலாம். இவை எல்லா வற்றையும் முன்கூட்டியே அறிந்த சங்கீதக்காரனாகிய தாவீது ஒவ்வொரு தீமையாய் சொல்ல பிரியப்படாமல் எல்லாத்தீங்கிற்கும் என ஒட்டு மொத்தமாக ஒரே வார்த்தையில் இந்த சங்கீதத்தில் மிகத்தெளிவாக கூறியுள்ளார். அப்போஸ்தலனாகிய பவுல் இதனை கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் என 2 தெசலோனிக்கியர் 3:3 இல்…