ஃபேன்டஸி கதையில் ஃபஹத் ஃபாசில்

மாயஜால ஃபேன்​டஸி சாகச கதை​யில் ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ள திரைப்​படம், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. இதை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். கால பைரவா இசையமைத்​துள்​ளார். ஷோயிங் பிசினஸ் நிறு​வனம் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்​தி​கே​யா, ‘பாகுபலி’ படத்​தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்தை தயாரித்​துள்​ளார்.

எஸ்​.எஸ்​.​ராஜமவுலி வழங்​கும் இப்​படத்​தின் ரிலீஸ் தேதியை படக்​குழு அறி​வித்​துள்​ளது. அதன்​படி அக்​.2-ம் தேதி இப்​படம் வெளி​யாக இருக்​கிறது. “இப்​படத்​தின் ஃபேன்​டஸி கதைக்​கள​மும், அதன் தனித்​து​வ​மான பின்​னணி​யும், படத்​தின் முக்​கிய சிறப்​பம்​சங்​களாக அமை​யும்” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

——-

அமீர் முதன்​மைக் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படத்​துக்கு ‘மா​காளி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இப்​படத்தை ஐங்​கரன் சார்​பாக கே. கருணா​மூர்த்தி – நவ்வி சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் மற்​றும் இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ் இணைந்து தயாரிக்​கின்​றனர். எஸ்​.பி.அர​விந்த் இப்​படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். இதில், அனில்​கு​மார், ஹரிஹரன், ராம், லெனின் பாரதி உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு ஜஸ்​டின் பிர​பாகரன் இசை அமைக்​கிறார். “மனித வாழ்​வின் வலி, எல்​லைகள் மற்​றும் ஆழமான சமூக அக்​கறை கொண்ட அழுத்​த​மான கதைக்​களத்​தில் இப்​படம் உரு​வாகி வரு​கிறது” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இதன் படப்​பிடிப்பு பூஜை​யுடன் தொடங்​கி​யுள்​ளது.

—-

துல்​கர் சல்​மான் நடித்​துள்ள ‘ஐ அம் கேம்’ படத்தை நஹாஸ் ஹிதா​யத் இயக்​கி​யுள்​ளார். இதில் கயாது லோஹர், கதிர், ஆண்​டனி வர்​கீஸ், மிஷ்கின், சம்​யுக்தா விஸ்​வ​நாதன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ஃபேன்​டஸி ஆக் ஷன் த்ரில்​லர் படமான இதை, துல்​கர் சல்​மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரித்​துள்​ளது. மலை​யாளம், தமிழ், தெலுங்​கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்​படம் இன்று (செப்​.3) வெளி​யாகிறது. இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

படத்​தின் ஹீரோ துல்​கர் சல்​மான் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் ஏராள​மான தமிழ் நடிகர்​கள் நடித்​துள்​ள​தால் தமிழ்ப் படம் போன்ற உணர்வை ரசிகர்​களுக்கு ஏற்​படுத்​தும். எங்​கள் நிறு​வனம் மிகப்​பெரிய பட்​ஜெட்​டில் தயாரித்​துள்ள பிரம்​மாண்​ட​மான படம் இது. ஒரு கதையைக் கேட்​கும்​போது ‘இதை நாம எப்​படிப் பண்​ணப் போகிறோம்?’ என்ற பயம் வந்​தால், அந்​தப் படத்தை உடனே ஒப்​புக்​கொள்​வேன்.

இந்​தப் படத்​தில் மனதள​விலும் உடலள​விலும் கடின​மான உழைப்​பைக் கொடுத்​துள்​ளேன். இதன் படப்​பிடிப்பு நேரத்​தில் இந்த கதா​பாத்​திரத்​துக்​குத் தேவை​யான மனதைரி​யம் நம்​மிடம் இருக்​கிற​தா? என்று யோசிக்​கும் அளவுக்கு இக்​க​தா​பாத்​திரம் சவாலாக இருந்​தது. இதில் கதிரின் நடிப்பு இயல்​பாக​வும் தீவிர​மாக​வும் அமைந்​துள்​ளது. நம்​பகத்​தன்​மை​யுடன் நடித்​துள்​ளார். மிஷ்கின் இந்​தப் படத்​தின் முக்​கிய​மான அங்​கம்.

அவருடைய உற்​சாக​மும் எனர்​ஜி​யும் இன்​றைய இளம் தலை​முறை​யினரிடமே அரி​தாகத்​தான் பார்க்க முடி​யும். சம்​யுக்தா விஸ்​வ​நாதனுக்கு இந்​தப் படம் முக்​கிய​மான திருப்​பு​முனை​யாக அமை​யும். இது முழு​மை​யான கமர்​ஷியல் என்​டர்​டெய்​ன​ராக உரு​வாகி​யுள்​ளது. இதில் காமெடி, ரொமான்​ஸ், மர்​மம், சஸ்​பென்​ஸ், ஆக் ஷன், த்ரில்​லிங் மற்​றும் கேமிங் என ரசிகர்​களை கவரும் பல அம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன” என்​றார்.

——

‘பிக்​பாஸ் சீசன் 7’ மூலம் பிரபல​மானவர் நடிகர் பிரதீப் ஆண்​டனி. இவர்​ ‘வாழ்’, ‘டாடா’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர் தனது காதலி பூஜாவை கடந்த 2024-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். இவர்​களுக்கு ஆண் குழந்தை உள்​ளது. இந்​நிலை​யில் தனது மனை​வி, மகனைப் பிரிந்​து​விட்​ட​தாக அவர் சமூக வலை​தளத்​தில் பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர், “நான் தவறான நபரைத் திரு​மணம் செய்​து​விட்​டேன் என்று நினைக்​கிறேன். திரு​மண​மான​தில் இருந்து மோச​மான மனித​னாக மாறிக்​கொண்​டிருந்​தேன்.

ஒவ்​வொரு நாளும் நான் ஒரு​வருடைய வாழ்க்​கையை அழித்​துக்​கொண்​டிருக்​கிறேன் என்ற உணர்வு இருந்​தது. இன்​னொரு​வருடன் இணைந்து எப்​படி மகிழ்ச்​சி​யாக வாழ்​வது என்று எனக்கு உண்​மை​யிலேயே தெரிய​வில்​லை.

இப்​போது என் திருமண வாழ்க்​கை​யில் இருந்து வில​கிச் செல்ல முடிவு செய்​திருக்​கிறேன். இந்த உறவில் என்​னால் மூச்​சுக்​கூட விட முடிய​வில்​லை. குழந்​தை, அதன் அம்​மாவுடன் இருப்​பதே நல்​லது என்று நினைத்​தேன். நான் எப்​போதும் அனாதை​யாக வாழ​வேண்​டும் என்​கிற எனது சாபத்தை ஏற்​றுக்​கொண்​டு​விட்​டேன்​” எனக்​ கூறி​யுள்​ளார்​.

Related posts