தனியார் கல்வி மாலை 6 மணியுடன் மூடப்படவேண்டும்

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளும் மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்து, கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டுமென, அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

மன்னார் மாவ ட்ட தனியார் கல்வி நிலையங்களின் இயக்குநர்களுடனான அவசரக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் (25) மாலை 3.00 மணியளவில் அம்மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்த போது, “ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை முற்பகல் 11.00 மணிக்கு பின்னர் ஆரம்பிக்க வேண்டுமென்பதுடன், வாரத்தில் 7 நாட்களிலும் மாலை 6.00 மணியுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அவசரமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts