‘மனிதன் தெய்​வ​மாகலாம்’ உண்மை சம்பவக் கதை!

செல்​வ​ராகவன், கவுசல்​யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்​.ஜி.மகேந்​திரா என பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘மனிதன் தெய்​வ​மாகலாம்’.

‘ட்​ரிப்’, ‘தூக்​குதுரை’ படங்​களை இயக்​கிய டென்​னிஸ் மஞ்​சு​நாத் இயக்​கி​யுள்​ளார். ரவிவர்மா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஏ.கே.பிரியன் இசை அமைத்​துள்​ளார்.

வியோம் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் விஜயா சதீஷ், ஆர்​.எஸ் சதீஷ் தயாரித்​திருக்​கும் இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

படக்​குழு​வினருடன் தயாரிப்​பாளர்​கள் கதிரேசன், தனஞ்​செயன், கமல​கண்​ணன் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

நடிகரும் இப்​படத்​தின் தயாரிப்​பாள​ரு​மான சதீஷ் பேசும்​போது, ‘‘சிறு​வய​திலிருந்தே என்​னைத் திரை​யில் பார்க்க வேண்​டும் என்​பது என் அம்​மா​வின் ஆசை.

அப்​போது இந்​தக் கதையை செல்​வ​ராகவன் சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்​தோம். அவர் ஒப்​புக்​கொண்​டால் மட்​டுமே இப் படத்தை எடுக்​கத் தீர்​மானித்​திருந்​தோம். அவர் சொன்ன ஓகே என்ற ஒரே வார்த்தை இந்​தப் படத்​துக்கு உயிர் கொடுத்​தது” என்​றார்.

Related posts