வசந்த முதலிகே விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

—–

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை எப்படியாவது செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை மறுத்துள்ளது

Related posts