‘பகாசூரன்’ படத்தின் டிரைலர் வெளியானது

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது.

இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். ‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையி்ல இந்த படத்தின் தற்போது வெளியாகி உள்ளது. இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Related posts