ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கிறிஸ் ராக் மறுப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கியவர் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக். இதில் சிறந்த நடிகருக்கான விருது, ‘கிங் ரிச்சர்ட்’ படத்துக்காக நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன் முறையாகக் கிடைத்தது. விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டைத் தலைபற்றி கிறிஸ் ராக், நகைச்சுவையாகப் பேசினார்.
ஆவேசமடைந்த, வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டுஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த வாய்ப்பை கிறிஸ் ராக் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Related posts