டைட்டானிக் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் கலையரசன் நடித்துள்ள டைட்டானிக் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கலையரசன்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘குதிரைவால்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். தொடர்ந்து கலையரசன் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’.

கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படதில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டைட்டானிக் திரைப்படம் மே 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால் டைட்டானிக் திரைப்படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் ‘டைட்டானிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 24-ஆம் தேதி டைட்டானிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts