இந்த வருடத்தில் அடுத்தடுத்து திரைக்கு வரும் பெரிய படங்கள்

இந்த வருடத்தில் பல பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வர தயாராகி உள்ளன.

கொரோனா பரவலால் 2 வருடங்களாக முடங்கிய திரையுலகம், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் செயல்பட தொடங்கி உள்ளது. படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. திரைக்கு வரும் படங்களும் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆர்ஆர்ஆர், புஷ்பா ஆகிய தெலுங்கு படங்களும், கே.ஜி.எப்-2 கன்னட படமும், தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரசிகர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தியேட்டர் அதிபர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்தடுத்து, பல பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வர தயாராகி உள்ளன. இதனால், வருகிற ஒவ்வொரு மாதமும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்க போகிறது. அடுத்த (மே) மாதம் உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி, ஜி.வி.பிரகாசின் ஐங்கரன், செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணி காயிதம், சிவகார்த்திகேயனின் டான், சுந்தர்.சி யின் பட்டாம் பூச்சி, ஆர்.கே.சுரேசின் விசித்திரன் ஆகிய படங்கள் வெளியாகிறது.

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம், அருண் விஜய்யின் யானை, ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம், விஜய்சேதுபதியின் மாமனிதன் ஆகிய படங்கள் ஜூன் மாதமும், மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி, தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம், லிங்கு சாமி இயக்கிய தி வாரியர் ஆகிய படங்கள் ஜூலை மாதமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 20-வது படமும், சமந்தாவின் யசோதா படமும் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

Related posts