கைதிகளை செருப்பு நக்க விட்டவருக்கு சிறப்பு பதவி

லொஹான் ரத்வத்த இன்று (10) காலை இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்படி, கிடங்கு வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இரத்தினக்கல் மற்றும் நகைகள் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக அவர் தற்போது செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts