கிறிஸ்டியான் இயரிக்சன் மீண்டும் ஆடுகளத்தில்

டென்மார்க்கின் புகழ் பெற்ற உதை பந்தாட்ட வீரர் கிறிஸ்டியான் இயரிக்சன் மறுபடியும் விளையாட விரும்புகிறார். இதற்காக இத்தாலியில் இவர் முன்னர் விளையாடிய அஜக்ஸ் அணி நிர்வாகத்தை நேற்று வெள்ளி சந்தித்து உரையாடியுள்ளார். அத்தருணம் தான் மறுபடியும் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததாக அவருடைய தொடர்பாளர் மார்டின் சூட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கொலன்ட் நாட்டில் இருந்து வெளிவரும் ரெலிகிராப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

அதேவேளை தனது பழைய அணிகளுடனும் அவர் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. உதாரணமாக கடந்த திங்களன்று ரொற்றன்காமுடன் பேசியுள்ளார். மேலும் த அத்திலான்ரிக் பத்திரிகையில் வெளியான ஒரு தகவலின் பிரகாரம் டென்மார்க்கில் உள்ள பிறன்ட் போட் அணி இவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கிறது.

கிறிஸ்டியான் இயரிக்சன் டென்மார்க்கின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பது தெரிந்ததே. மிகவும் உச்ச தரத்தில் இருந்த போது இவர் விளையாட்டு எதிர்பாராத சூறாவளியை சந்தித்தது. கடந்த ஆண்டு யூன் மாதம் 12ம் திகதி ஐரோப்பா கிண்ண ஆட்டத்திற்காக பின்லாந்து நாட்டுடன் டென்மார்க் மோதியபோது இவருக்கு எதிர்பாராத வகையில் மாரடைப்பு ஏற்பட்டது. டென்மார்க் பாக்கன் மைதானத்தில் சுழன்று விழுந்த இவர் மறுபடியும் உயிர் பிழைத்தது ரசிகர்களின் பலத்த வேண்டுதலால் என்றால் அது மிகைக் கூற்றல்ல. அன்றைய தினம் உலகப் புகழ் பெற்ற வைத்தியர்கள் மைதானத்தில் இருந்ததாலும், அதி உயர் கருவிகள் இருந்ததாலும் இவர் பிழைத்தார் என்றும் கூறுவது தவறல்ல.

அதன் பின் அவர் விளையாடவில்லை. இத்தாலியின் அஜக்ஸ் அணியும் அவரை விளையாட அனுமதிக்க மறுத்துவிட்டது. இப்போது மறுபடியும் களமிறங்குகிறது காளை.. அது சரி அவருக்கு திடீரென எப்படி இதயம் நின்றது..? அது அதிசயம்தான் இப்படி அரிதாக சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. பிரபல இந்திய கன்னட நடிகர் பூஜித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் மரணித்தது போல கடும் பயிற்சியாளருக்கு மாரடைப்பு ஆபத்து அபூர்வமாக வருவதுண்டு.

ஆபத்தான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இருந்து மீண்டாலும் இவரால் தொடர்ந்து விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனால் எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே என்பது போல இப்போது காலம் மாறியிருக்கிறது.. புது நம்பிக்கையுடன் மறுபடியும் ஆடு களம் திரும்புகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. எப்படியோ அவருடைய அபாரா திறமை மங்கிவிடக் கூடாதுணு அவர் ஆசைப்பட்டபடி மேலும் உலகப் புகழை பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு மட்டுமல்ல உதை பந்தாட்ட ரசிகர்கள் எல்லோருக்கும் இருக்கிறது..

பூவே பூச்சூட வா – எம்
நெஞ்சில் பால் வார்க்க வா..

அலைகள் 22.01.2022

Related posts