‘ரைட்டர்’ படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

டைரக்டர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌சன்ஸ் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ரைட்டர்’. பா. ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுப்ரமணியம் சிவா மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரைட்டர் திரைப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ஓய்வு பெற இருக்கும் ஒரு போலீஸ்காரர் எதிர்கொள்ளும் சிக்கலைக் கூறும் விதமாக இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.வருகிற 24-ந்தேதி ரைட்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Related posts