ஒரு நாடு, ஒரு சட்டம் உடனடியாக நிறுத்த வேண்டும்

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

சேதனப் பசளை தொடர்பான அறிவூட்டல் போதாமையினால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.இரசாயனப் பசளையில் இருந்து திடீரென சேதனப் பசளைக்கு மாறுவதால் உற்பத்தி குறையும் குழப்பத்தில் அவர்கள் உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு சரியாக தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்.உற்பத்தி குறைந்தால் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் மீன்பிடித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். கிழக்கில் கொள்கை கோஷ்டியொன்று உருவாகி மீனவர்களின் உபகரணங்கறை நாசமாக்கி வருகின்றனர். பாதுகாப்பு வழங்க கோரியுள்ளோம். மீன்பிடி துறைமுகமாக ஒலுவில் துறைமுகத்தை மாற்றவும் கோரியுள்ளோம்.

Related posts