ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்


தாதா சாகேப் விருது பெற்றமைக்காக தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
டெல்லியில் நேற்று (அக்.25) நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதினை வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ரஜினிக்கு விழாவில் கலந்துக் கொண்ட அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்டு ரஜினிகாந்த் விழாவில் பேசியபோது, “தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் நெகிழ்ச்சி பொங்க ட்வீட் செய்துள்ளார்.

Related posts