பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2021-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு.இம்பென்ஸ் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

Related posts