மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது

புதிய சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் பழைய முறைப்படியேனும் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது என்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடு என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் மற்றும் வாக்களிக்கும் கட்டமைப்பில் அல்லது விதிகளில் திருத்தங்களை கண்டறிய மற்றும் அது தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்தற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன அதன் உறுப்பினர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும், புதிய சட்டத்தை இயற்றாமல் மாகாண சபை தேர்தலை எந்த வகையிலும் நடத்த முடியாது என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது அவசியமானாலும், அதற்கு தடையாக இது உள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குழு உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts