விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறித்த போராட்டத்தை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பினர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக முன்னெடுத்தனர்.

—-

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிறுவனத்துக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லையென இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துவரும் நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்தவை அல்ல. இந்தியாவை தளமாக கொண்டவையும் அல்ல என்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரலாய பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கைகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதா? என்ற தலைப்பில் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வீசா வழங்கும் நடவடிக்கைகளை, இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதென பதிவுகளும் கருத்துக்களும் வெளியாகியுள்ளதை அவதானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1 அல்லது 2 ஆம் திகதி எந்தவிதமான அறிவித்தலையும் வெளியிடவில்லை என அவர் அந்த விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் அறிக்கை வௌியிட்டுள்ளதாக கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும், அவை பொய்யான செய்திகள் எனவும் அந்த விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts